X

சென்னை ஐ.சி.எஃப் மைதானத்தில் நடைபெறும் IRCE 2026 கண்காட்சியில் ஹார்டிங் இந்தியா பங்கேற்பு

2026 மார்ச் 12 முதல் மார்ச் 14 வரை நடைபெறும் IRCE 2026 கண்காட்சியில், ஹார்டிங் இந்தியா நிறுவனம் அதிநவீன ரயில்வே இணைப்பு வசதிக்கானதனது தீர்வுகளைக் காட்சிப்படுத்துகிறது. இக்கண்காட்சிக்குவருகைதரும்பார்வையாளர்கள் ஹார்டிங் நிறுவனத்தின் அரங்கத்தைஅரங்கு B, எண். 125-ல் காணலாம்.வருங்காலத்தில் ரயில் பெட்டிகளை இயக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட தங்களின் புதிய இணைப்பு தொழில்நுட்பங்களை இந்நிறுவனம் பெருமிதத்துடன்இந்நிகழ்வில்அறிமுகப்படுத்துகிறது.

இக்கண்காட்சியில் இந்நிறுவனத்தின் பங்கேற்பு அதிவேகமான மற்றும் நிலைப்புத் தன்மையுள்ள இந்திய ரயில் போக்குவரத்தின் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்குவது மீது இது கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறது.

IRCE இந்தியா 2026கண்காட்சி, ரயில்வே மற்றும் இணைப்புவசதிக்கானபுதுமையானதொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்துவதற்கான ஒரு சிறந்த தளமாகும். இந்நிகழ்வில் பங்கேற்பதன் மூலம் இத்தொழில் துறையின் தலைவர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளர்களுடன் கலந்துரையாடிஉறவை வலுப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். “ஹார்டிங் நிறுவனத்தின் தொழில்நுட்பங்கள் எதிர்கால போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன” என்றுஹார்டிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. ஜேக்கப் சாண்டிகூறினார்.ஐசிஎஃப்-ன்பொதுமேலாளர்திரு. U. சுப்பாராவ், ஸ்ரீ சுப்ரான்ஷு சேகர் மிஸ்ரா, பொது மேலாளர், மெட்ரோ ரயில்வே, கொல்கத்தா.அவர்கள் ஹார்டிங் இந்தியா நிறுவனத்தின் அரங்கத்திற்கு வருகை தந்தது இந்நிகழ்வுக்கு மேலும் சிறப்பு சேர்த்தது.

“இந்தியா முழுவதும் ஸ்மார்ட் ரயில்வே செயல்பாடுகளை நோக்கி தொழில்துறைகள் வேகமாக முன்னேறி வரும் நிலையில், சிறப்பான மற்றும் இணைக்கப்பட்ட எதிர்காலத்திற்கு நாங்கள்தயாராக இருக்கிறோம். ரயில்வே மற்றும் போக்குவரத்துத் துறைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அதிநவீன மின்-இணைப்பு தீர்வுகளுடன், இந்த ஆண்டின் IRCE எக்ஸ்போ 2026-ல் நாங்கள் பங்கேற்கிறோம். ரயில் பெட்டிகள் மற்றும் உள்கட்டமைப்புகளில் நம்பகமான, பாதுகாப்பான மற்றும் திறமையான மின்சாரம், சிக்னல் மற்றும் தரவு பரிமாற்றத்தை உறுதி செய்யும் உயர்தர கனெக்டர்களில் நாங்கள் அதிக கவனம் செலுத்துகிறோம்” என்று இந்நிறுவனத்தின் அதிகாரிகள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

• Han® HPR & HPTC சீரிஸ்:கடினமான ரயில்வே சூழல்களுக்கு ஏற்ற உறுதியான மற்றும் எந்த வானிலையையும்எதிர்கொள்ளும் கனெக்டர்கள்.

• அண்டர்ஸ்லங் மற்றும் ரூஃப் மவுண்டட் இன்டர்-வெஹிக்கிள் (IV) கப்ளர்ஸ்:ரயில் பெட்டிகளுக்கு இடையே திறமையான மாடுலர் இணைப்புகளுக்காக வடிவமைக்கப்பட்டஇவை, கடுமையான சூழல்களிலும் நீடித்து உழைக்கக் கூடியவை.

• சிறிய அளவிலான, அதிக செயல்திறன் கொண்ட இடைமுகங்கள்:குறைந்த எடை மற்றும் அதிக திறன் கொண்ட வடிவமைப்புகளுக்கான தேவையை பூர்த்தி செய்யும் கச்சிதமான தீர்வுகள்.

• குறைந்த, நடுத்தர மற்றும் அதிக மின்சக்தி மற்றும் வோல்டேஜ் Han® Series EL தயாரிப்புகள்:மின் விநியோகம் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்காக பிரத்யேகமாகஉருவாக்கப்பட்டவை; அதிக நம்பகத்தன்மையையும், எளிதான பராமரிப்புவசதியையும் வழங்குகின்றன.

”அதிவேக ரயில்கள் முதல் ஸ்மார்ட் உள்கட்டமைப்பு வரை, இந்தியாவின் வளர்ந்து வரும் ரயில்வே துறைக்கு எங்களின் இணைப்பு தீர்வுகள் எவ்வாறு சிறப்பான பங்களிப்பை வழங்குகிறது என்பதை IRCE 2026 நிகழ்வில் செயல்முறை விளக்கமாக வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.

“இணைப்புத்திறன், புத்தாக்க உத்திகள் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றில் தனது நீண்டகால நிபுணத்துவத்துடன், உலகெங்கிலும் உள்ள முன்னணி ரயில்வே OEMநிறுவனங்கள் மற்றும் சிஸ்டம் இன்டெக்ரேட்டர்களுடன் ஹார்டிங் தொடர்ச்சியாக இணைந்து செயல்படுகிறது. இது இந்தியாவின் போக்குவரத்து அமைப்பை மேலும் சிறப்பானதாக மாற்ற உதவுகிறது.எமது நிறுவனத்தின் நிபுணர்கள் அரங்கில் இருப்பார்கள். எமதுநிறுவன தயாரிப்புகளின் பயன்பாடுகளை விளக்கவும், தொழில்நுட்ப விவரங்களைப் பகிர்ந்து கொள்ளவும், இந்தியாவின் அதிவேக இணைப்பு தீர்வுகளுக்கு எமதுநிறுவனத்தின் தயாரிப்புகள் எவ்வாறு ஆதரவளிக்கும் என்பதைப் பற்றி விரிவாகவிளக்குவார்கள்”என்றுதிரு. ஜேக்கப் சாண்டிமேலும்தெரிவித்தார்.