X

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று (நவம்பர் 4) நீலகிரி, கோவை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் தஞ்சாவூர் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல், நாளை (நவம்பர் 5) தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.