தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நகலை தீயிட்டு எரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ””தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும்!
பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!
அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது!
இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.
இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்.
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் – இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!” என்று தெரிவித்துள்ளார்.