19 வது இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில், ஐதராபாத் – பெங்களூர் அணிகள் மோதின. இதில், பெங்களூர் அணி வெற்றி பெற்றது. இன்று நடைபெறும் 2 வது போட்டியில் கொல்கத்தா – மும்பை அணிகள் மோதுகின்றன. நாளை நடைபெறும் 3 வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
மேலும், வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை (மார்ச் 30) தொடங்க உள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விலை ரூ.2000 முதல் ரூ.8000 வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சீசனில் சி.எஸ்.கே அணி மொத்தம் 14 போட்டிகளில் விளையாடுகிறது. இதில், 7 போட்டிகள் சென்னை சேப்பாக்கத்திலும், மீதமுள்ள 7 போட்டிகள் வெளியூரிலும் நடைபெற உள்ளது.