மக்களுக்கு பாதுகாப்பை மேம்படுத்தவும், மேலும் வலுப்படுத்தவும் ஒரு முக்கியமான முயற்சியாக ‘ஐசிஎல் பின்கார்ப் (ICL Fincorp) நிறுவனம் லையன்ஸ் கிளப் மற்றும் தமிழ்நாடு காவல்துறையுடன் இணைந்து, சென்னை, அசோக் நகர் முழுவதும் 100 சிசிடிவி கேமராக்கள் கொண்ட கண்காணிப்பு தொடங்கியுள்ளது.
இந்த முயற்சி அப்பகுதியில் குடியிருப்போருக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்குவதில் ICL Fincorp-இன் உறுதியை வெளிப்படுத்துவதோடு, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது.
R3 அசோக் நகர் காவ்ல நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, LACTC-இன் Good Will தூதுவரும், ICL Fincorp நிறுவனத்தின் CMD-யுமான வழக்கறிஞர் கே.ஜி.அனில்குமார், பல்வேறு விருந்தினர்களின் முன்னிலையில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா அறையை திறந்து வைத்தார். ICL Fincorp நிறுவனத்தின் முழுநேர் இயக்குநர், தலைவர் மற்றும் சி.இ.ஓ திருமதி உமா அனில்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
தி.நகர் மாவட்ட காவல்துறை இணை ஆணையர் எஸ்.குத்தாலிங்கம், காவல்துறை உதவி ஆணையர் ஆர்.ஆல்ட்ரின், ஆர்3 காவல் நிலைய (L&O) ஆர்வாளர் எஸ்.சதீஷ்குமார், லையன்ஸ் கிளப் மாவட்டம் 3241F முன்னாள் மாவட்ட ஆளுநரும், கேபினெட் ஆலோசகருமான பி.எம்.ஜெ.எப் லையன் டாக்டர்.ஜி.மணிலால் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
தங்க நகைக் கடன் மற்றும் நிதிச் சேவைகளில் சிறந்து விளங்கும் முன்னணி NBFC நிறுவனமான ICL Fincorp, சமூக நலத் திட்டங்களில் தொடர்ந்து பங்கெடுத்து, பொதுப் பாதுகாப்பு மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளின் நலனில் தனது உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
ICL Fincorp நிறுவனத்தின் இந்த முயற்சி, சிவிக் அமைப்புகள், காவல்துறை மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகியோரின் ஒருங்கிணைந்த முயற்சியாக தொடங்கப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், பாதுகாப்பான குடியிருப்புகளை உருவாக்கவும், அனைத்து குடிமக்களும் ஒரு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தவும் நோக்கமாகக் கொண்டு இம்முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.