கேப்டகான் வகைப் போதைப்பொருளை கைப்பற்றி இந்திய பாடுகாப்பு முகமைகள் சாதனை! – அமைச்சர் அமித்ஷா தகவல்
இந்தியாவை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்ற மோடி அரசு உறுதியுடன் செயல்பட்டு வரும் நிலையில், ‘ஆபரேஷன் ரேஜ்பில்’ (Operation RAGEPILL) என்ற அதிரடி நடவடிக்கை மூலம், “ஜிஹாதி போதைப்பொருள்” என்று அழைக்கப்படும் ‘கேப்டகான்’ (Captagon) வகைப் போதைப்பொருளை இந்தியப் பாதுகாப்பு முகமைகள் முதல்முறையாகப் பறிமுதல் செய்து சாதனை படைத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளுக்குக் கடத்துவதற்காகக் கொண்டு வரப்பட்ட, சர்வதேச சந்தையில் சுமார் 182 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த மாபெரும் போதைப்பொருள் கடத்தல் கும்பலை முறியடித்ததுடன், இதில் தொடர்புடைய வெளிநாட்டு கடத்தல்காரர் ஒருவரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்தியாவிற்குள் நுழையும் அல்லது இந்தியாவின் எல்லையை ஒரு கடத்து பாதையாகப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்குக் கடத்தப்படும் ஒவ்வொரு கிராம் போதைப்பொருளையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம் என்று மீண்டும் உறுதியளித்துள்ள அமித் ஷா, இந்த அதிரடி வேட்டையைத் துணிச்சலுடனும் விழிப்புடனும் நடத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியக (NCB) அதிகாரிகளுக்குத் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
