X

நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கி மாயமான தமிழர்கள் 100 பேரை தேடும் பணி தீவிரம்!

நேபாளத்தில் கடந்த 26-ந்தேதி ஏற்பட்ட பெரு வெள்ளம் உலகையே கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இமயமலையில் பனிச்சிகரம் உடைந்து போதோகோஷி, திரிசூலி, நாராயணி ஆகிய 3 நதிகளிலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளை வாரி சுருட்டியது.

இதில் 2 ஆயிரத்தும் மேற்பட்டவர்கள் காணாமல் போனார்கள். இது தொடர்பாக நேபாள அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் 2,362 பேர் வெள்ளத்தில் சிக்கி மாயமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இன்றுடன் 5 நாட்கள் ஆகும் நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சேறும் சகதியுமாக காணப்படும் பகுதிகளில் உடல்களை தேடி கண்டு பிடித்து மீட்டு வருகிறார்கள். வெள்ளத்தின் கோரப்பிடியில் சிக்கியதால் பல உடல்கள் உருக்குலைந்து சிதைந்து உள்ளன.

நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்தவர்களை மீட்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், தென்னரசு, வினோத் அடங்கிய குழு டெல்லி சென்றது. அவர்கள் டெல்லியில் முகாமிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்கள். இதன் மூலம் நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள் படிப்படியாக மீட்கப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட உள்ளனர். ஏற்கனவே 21 தமி ழர்கள் மீட்கப்பட்டு சென்னை திரும்பி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் டெல்லியில் இருந்து மூன்று அமைச்சர்கள் நேற்று இரவு சென்னை திரும்பினார்கள். விமான நிலையத்தில் அமைச்சர் ராஜ்மோகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த 3 நாட்களாக முதல்-அமைச்சர் விஜய் ஆணைக்கிணங்க நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க டெல்லியில் முகாமிட்டு பல்வேறு பணிகள் மேற்கொண்டோம். தற்போது அயலக தமிழர் துறை அமைச்சர் தென்னரசு டெல்லியில் தங்கி மீட்பு பணிகளை கண்காணித்து கொண்டிருக்கிறார்.

இந்திய வெளியுறவு துறை செயலாளரை நேரில் சந்தித்து ஆலோசித்தோம். தமிழ்நாட்டில் இருந்து 319 பேர் பல்வேறு குழுக்கள் மூலமாக நேபாளம் சென்று உள்ளனர். இதில் 219 பேர் பாதுகாப்பாக இருக்கிறார்கள். வருகிற 31-ந்தேதி (நாளை) இரவுக்குள் சென்னை வந்து விடுவார்கள்.

மீதமுள்ள 100 தமிழர்கள் இருக்கும் இடம் தெரியவில்லை. அவர்களை கண்டுபிடிக்க முடியாததால் மாயமானவர்கள் பட்டியலில் இருந்து வருகிறார்கள். ஹெலிகாப்டர் மூலமாக தேடும் பணி நடைபெற்று வருகிறது. நேபாள வெள்ளம் சர்வதேச பேரிடராக உள்ளது. பல நூறு கிலோ மீட்டர் தூரத்தில் கூட உடைமைகள் கிடைக்க கூடிய வாய்ப்புகள் உள்ளன. 2 நாடுகளின் ராணுவம் மீட்பு பணியில் ஈடுப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.