X

ஐபிஎல் 2026 – சி.எஸ்.கே, பஞ்சாப் கிங்ஸ் இன்று மோதல்

19 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இன்றைய லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.

கவுகாத்தியில் நடந்த ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ், தற்போதைய போட்டியில் வெற்றி பெற்று வெற்றி கணக்கை தொடங்குமா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

பஞ்சாப் கிங்ஸ் அணி மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கிறது. தொடக்க ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி வெற்றி பெற்ற அந்த அணி வெற்றி கணக்கை தொடரும் முனைப்பில் இருக்கும் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில், இரு அணியும் தலா 16 வெற்றி பெற்றுள்ளன. அதே சமயம், சென்னையில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதியதில் 4 போட்டிகளில் சென்னையும், 5 போட்டிகளில் பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றுள்ளன.