12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு மோதின. லீக் சுற்றுகள் முடிவில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
முதல் அரையிறுதியில் இலங்கையை வீழ்த்தி இந்தியாவும், 2வது அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தானும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில், துபாயில் நடைபெறும் இறுதிப் போட்டியில் 8 முறை சாம்பியனான இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் இறுதி களத்தில் சந்திப்பது 11 ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே லீக் சுற்றில் இந்திய அணி 90 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது நினைவு கூரத்தக்கது.