X

கேதார்நாத் கோவில் நடை ஏப்ரல் 22 ஆம் தேதி திறப்பு!

இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற கேதார்நாத் திருத்தலத்தின் நடை, இந்த ஆண்டு நாளை -ஏப்ரல் 22-ஆம் தேதி காலை 8:00 மணிக்கு பக்தர்களின் தரிசனத்திற்காகத் திறக்கப்பட உள்ளது.

இதையொட்டி, உத்தரகண்ட் அரசு மற்றும் பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் கமிட்டி சார்பில் மிக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்த கடும் பனிப்பொழிவால் பணிகள் சற்றுத் தாமதமானாலும், தற்போது தற்காலிக முகாம்கள், குடிநீர் வசதி, மின்சாரம் மற்றும் மருத்துவ மையங்களை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

யாத்ரீகர்களின் கூட்டத்தை முறைப்படுத்த ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வாயிலாகப் பதிவு செய்யும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி நடை ஏப்ரல் 19-ஆம் தேதியே திறக்கப்பட்டு சார் தாம் யாத்திரை முறைப்படி தொடங்கிவிட்ட நிலையில், கேதார்நாத் கபாட் திறப்பு விழாவைக் காண நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இமயமலை நோக்கிப் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர்.