கருவுறுதல் சிகிச்சை மையங்களில் மருத்துவர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்விகளில் ஒன்று, பரிசோதனை முடிவுகள், IVF அல்லது சிகிச்சை முறைகள் குறித்து மட்டுமல்ல; கருவுறுதல் தொடர்பான மதிப்பீட்டிற்கு எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?என்பதுமாகும். குறிப்பாக, எவ்வளவு காலம் காத்திருந்த பிறகு கருவுறுதல் நிபுணரை சந்திக்க வேண்டும் என்பது பல தம்பதிகளின் முக்கியமான சந்தேகமாக உள்ளது.
சென்னையில் உள்ள பிர்லா ஃபெர்டிலிட்டி& IVF மையத்தின் கருவுறுதல் நிபுணர் டாக்டர் ஷைலா உஸ்மான் அலி கூறுகையில், “அனைத்து தம்பதிகளுக்கு பொருந்தக்கூடிய ஒரே பதில் இதற்கு இல்லை. இருப்பினும், கவனிக்க வேண்டிய சில முக்கிய அறிகுறிகள் உள்ளன. பலர் அவற்றை முன்கூட்டியே கவனித்தாலும், சரியான நேரத்தில் மருத்துவரை அணுகுவதில் தாமதம் செய்கின்றனர்,” என்றார்.
வயது என்பது கருவுறுதல் திறனை மதிப்பிடுவதில் மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். 35 வயதிற்குக் குறைவான பெண்கள், ஓராண்டு காலம் இயல்பான முறையில் கர்ப்பம் தரிக்க முயற்சித்தும் வெற்றி பெறவில்லை என்றால், கருவுறுதல. 35 வயது அல்லது அதற்கு மேற்பட்ட நிபுணரின் மதிப்பீட்டைப் பெறுவது பரிந்துரைக்கப்படுகிறது பெண்களுக்கு, இந்தக் கால அவகாசம் ஆறு மாதங்களாகக் குறைகிறது. வயதைத் தவிர, தம்பதியினர் எவ்வளவு காலமாக கர்ப்பம் தரிக்க முயற்சித்து வருகிறார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளாமல், சில அறிகுறிகள் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டிய அவசியத்தை உணர்த்தக்கூடும். ஒழுங்கற்ற அல்லது மாதவிடாய் வராமை, PMOS (முன்னர் PCOS என அழைக்கப்பட்டது), எண்டோமெட்ரியோசிஸ், முன்பு மேற்கொள்ளப்பட்ட இடுப்புப் பகுதி அறுவைச் சிகிச்சை, தைராய்டு கோளாறுகள் அல்லது மீண்டும் மீண்டும் கருச்சிதைவு ஏற்படுதல் போன்றவை, மேலும் காத்திருப்பதை விட கருவுறுதல் நிபுணரை விரைவில் அணுகுவது சிறந்தது என்பதைக் குறிக்கக்கூடிய அறிகுறிகளாகும்.
கருவுறுதல் திறனைப் பாதிக்கும் காரணிகளில் வாழ்க்கைமுறை பழக்கவழக்கங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. புகைப்பிடித்தல், மது அருந்துதல், உடல் எடை குறியீடு(BMI), உறக்கப் பழக்கம்மற்றும் ஒட்டுமொத்த உடல்நலம் ஆகியவை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரின் இனப்பெருக்க ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும். இக்காரணிகள் மட்டுமே கருவுறுதலின் இறுதி முடிவை நிர்ணயிப்பதில்லை. இருப்பினும், தம்பதியரின் ஒட்டுமொத்த உடல்நல நிலையை முழுமையாகப் புரிந்துகொண்டு, அவர்களுக்கு ஏற்ற அடுத்தகட்ட மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை முறையைத் தீர்மானிக்க கருவுறுதல் நிபுணர்களுக்கு இவை முக்கியமான வழிகாட்டுதலாக அமைகின்றன.
தனிப்பட்ட முடிவுகள் மட்டுமே முழுமையான தகவலாக இல்லாதபோது குறைந்த AMH முடிவும் இதே போன்ற ஒரு வகையில்தான் அடங்கும். அது மட்டுமே இறுதி முடிவைக் கணிக்காது. ஆனால், அது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள், தாமதமான கர்ப்பம், வாழ்க்கை முறை காரணிகள் அல்லது கவலைக்குரிய அல்ட்ராசவுண்ட் பரிசோதனை முடிவுகளுடன் சேர்ந்து காணப்படும்போது, இந்தக் கலவையின் விளைவுகளை முறையாக மதிப்பீடு செய்ய வேண்டும்.
ஆண்களின் கருவுறுதல் திறனுக்கும் இதுவே பொருந்தும். கருவுறுதல் தொடர்பான பரிசோதனைகள் ஆரம்பத்திலிருந்தே தம்பதியர் இருவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். விந்துப் பரிசோதனை அறிக்கை மற்றும் இனப்பெருக்கச் செயல்பாடு குறித்த விவரங்கள் ஆகியவை ஆண்களுக்குரிய கருவுறுதல் சிக்கல்களைக் கண்டறிய உதவும். பெண்ணின் மீது மட்டுமே கவனம் செலுத்துவது, முழுமையான மதிப்பீட்டையும் அடுத்தகட்ட நடவடிக்கையையும் தாமதப்படுத்தக்கூடும்.
கருவுறுதல் இடர் மதிப்பீட்டின் பங்கு என்ன?
பெரும்பாலான தம்பதிகள் எதிர்கொள்ளும் சவால், தகவல் பற்றாக்குறை அல்ல, மாறாக சூழல் விளக்கமின்மையே ஆகும். தனிப்பட்ட முடிவுகள், வாழ்க்கை முறை காரணிகள் மற்றும் அறிகுறிகளைத் தனித்தனியாகப் பார்க்கும்போது, அவற்றை எளிதில் புறக்கணித்துவிடலாம் அல்லது அளவுக்கு அதிகமாகச் சிந்தித்துவிடலாம். தொடர்புடைய காரணிகள் எவ்வாறு ஒன்றிணைந்துள்ளன என்பதைப் பார்ப்பதே இதற்கு உதவுகிறது.
கருவுறுதல் தொடர்பான இடர் மதிப்பீடு (Fertility Risk Assessment) என்பது வயது, மாதவிடாய் சுழற்சியின் சீரான தன்மை, கருத்தரிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் காலம், புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற வாழ்க்கை முறை காரணிகள், உடல் நிறை குறியீட்டெண் (BMI) மற்றும் பிற முக்கியக் குறியீடுகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, கருவுறுதல் நிபுணரை அணுக வேண்டுமா என்பது குறித்த தெளிவான புரிதலை வழங்குகிறது.
இந்த மதிப்பீட்டில் பல்வேறு வகைகளும் இருக்கலாம். ஒரு அடிப்படை வகையானது உடல்நலம், மாதவிடாய் சுழற்சி மற்றும் வாழ்க்கை முறை சார்ந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டிருக்கலாம்; அதேவேளையில், மற்றொரு வகையில் தம்பதியினர் தங்களின் AMH அளவு மற்றும் விந்துப் பரிசோதனை முடிவுகள் போன்ற மருத்துவ அறிக்கைகளை இணைக்க அனுமதிக்கப்படலாம். இதன் மூலம், தனிப்பட்ட உடல்நலக் காரணிகளுடன் மருத்துவத் தகவல்களையும் கருத்தில் கொண்டு மதிப்பீட்டை மேற்கொள்ள முடியும்.
பிர்லா ஃபெர்டிலிட்டி & IVF என்பது கருவுறுதல் இடர் மதிப்பீட்டை வழங்கும் கருவுறுதல் பராமரிப்பு வழங்குநர்களில் ஒன்றாகும். இதன் நோக்கம் ஆன்லைனில் நோயைக் கண்டறிவது அல்ல, மாறாக தம்பதிகள் தொடர்ந்து காத்திருக்க வேண்டுமா அல்லது ஒரு கருவுறுதல் நிபுணரிடம் பேச வேண்டுமா என்பதைப் புரிந்துகொள்ள உதவுவதாகும். இது ஒரு கலந்தாஆலோசனைக்கு மாற்றாக அமையாது, ஆனால் எப்போது நிபுணர் ஆலோசனையைப் பெறுவது என்பதில் உறுதியற்றவர்களுக்கு இது ஒரு பயனுள்ள முதல் படியாக இருக்கும்.
IVF உள்ளிட்ட சிகிச்சைகள் தேவைப்படக்கூடிய தம்பதியினருக்கு, முன்கூட்டியே மேற்கொள்ளப்படும் மதிப்பீடு, சிதறிய தகவல்களிலிருந்து விடுபட்டு, கருத்தரிப்பு நிபுணருடன் ஒரு முறையான மற்றும் தெளிவான உரையாடலை மேற்கொள்ளவும் உதவும்.