X

டி20 உலகக் கோப்பைகளில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்கள் பட்டியல் – 5 வது இடத்திற்கு முன்னேறிய பும்ரா

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புது சாதனைகளை படைத்தது. நியூசிலாந்து அணிக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வெறும் 15 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் மூலம் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. டி20 உலகக் கோப்பை வெற்றியைத் தொடர்ந்து இந்திய மற்றும் இந்திய அணி வீரர்கள் படைத்த புது சாதனைகள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த வரிசையில் தற்போது ஜஸ்பிரித் பும்ரா படைத்த புது சாதனைகள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த வரிசையில் தற்போது ஜஸ்பிரித் பும்ரா படைத்த புது சாதனை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களின் டாப் 5 பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெற்றுள்ளார். இதுவரை தான் விளையாடிய டி20 உலகக் கோப்பை தொடர்களில் ஜஸ்பிரித் பும்ரா 40 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன் மூலம், அவர் டி20 உலகக் கோப்பை தொடர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடர்களில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் வங்காளதேசம் அணியை சேர்ந்த ஷதகிப் அல் ஹாசன் முதலிடத்தில் உள்ளார். இவர் இதுவரை 50 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவரைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த ஆடம் ஜாம்பா 44 விக்கெட்டுகளை கைப்பற்றி இரண்டாவது இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து அணி வீரர் ஆதில் ரஷித் உள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து 43 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் அணி வீரர் ரஷித் கான் நான்காவது இடத்திலும், இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா 40 விக்கெட்டுகளை கைப்பற்றி ஐந்தாவது இடத்தில் உள்ளார். இதேபோல் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்காவும் 40 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.