X

எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் திடீர் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) நிறுவனம் சுமார் 50 கோடி ரூபாய் வாடகை பாக்கியை வழங்காததைக் கண்டித்து, எல்.பி.ஜி (LPG) கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள இந்தப் பாக்கித் தொகையை உடனடியாக வழங்கக் கோரி லாரிகள் இயக்கப்படாததால், எரிவாயு முனையங்களில் இருந்து சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு எரிவாயு கொண்டு செல்வது முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடர் போராட்டம் காரணமாகச் சந்தையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தடைபட்டு, பொதுமக்களுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதால், இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.