X

மொபைல் போன்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவும் ‘M-Kavach 2’ – காவல்துறை அறிவிப்பு

சைபர் குற்றங்கள் மற்றும் ஆன்லைன் மோசடிகளில் இருந்து பொதுமக்கள் தங்களது மொபைல் போன்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவும் ‘M-Kavach 2’ செயலியைப் பயன்படுத்துமாறு தமிழ்நாடு காவல்துறை விழிப்புணர்வுப் பகிர்வை வெளியிட்டுள்ளது.

இந்த செயலியின் மூலம் மொபைல் போனின் பாதுகாப்பு அமைப்புகளை எளிதாகச் சரிபார்க்க முடிவதுடன், போனில் மறைமுகமாக இயங்கும் அச்சுறுத்தல்கள் (Hidden/Sideloaded Apps) மற்றும் ஹார்டுவேர் நிலைகளையும் முழுமையாக ஸ்கேன் செய்து கண்டறிய முடியும்.

மேலும், மொபைலில் பதிவிறக்கம் செய்யப்படும் செயலிகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துதல், வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் குறுஞ்செய்திகள் (SMS) வழியாக வரும் ஆபத்தான லிங்குகளை ‘URL Scanner’ வசதி மூலம் ஆய்வு செய்தல் மற்றும் ஆன்லைன் நிதி மோசடிகள் குறித்த புகார்களை உடனுக்குடன் பதிவு செய்தல் போன்ற பல்வேறு அத்தியாவசிய பாதுகாப்பு அம்சங்கள் இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

Tags: M-Kavach 2