X

மதுராந்தகம் இடைத்தேர்தல் – வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக சுயேச்சை வேட்பாளர் மூர்த்தி குற்றச்சாட்டு

மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில், வாக்கு எண்ணிக்கையில் பெரும் முறைகேடு நடந்ததாகக் கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுயேச்சை வேட்பாளர் ஜி. மூர்த்தியை மத்திய சேமக் காவல் படை (CRPF) வீரர்கள் மையத்திலிருந்து அதிரடியாக வெளியேற்றினர்.

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அமைதியைக் குலைக்கும் வகையிலும், வாக்கு எண்ணும் அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறாகவும் தொடர்ந்து சலசலப்பை ஏற்படுத்தியதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டுப் பாதுகாப்புப் படையினர் இந்த உடனடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இச்சம்பவத்தால் வாக்கு எண்ணும் மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவிய நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.