தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதை என்று அறிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், திமுக கூட்டணி கட்சிகளுக்காக ஆதரவு தெரிவித்து பிரசாரம் மேற்கொள்ளப் போவதாக தெரிவித்தார். அதே சமயம், இந்த அறிவிப்புக்கு முன்பு அக்கட்சி தங்களது கட்சியிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்ற நிலையில், விருப்ப மனுக்கள் வழங்கிய போது அதற்கான கட்டணம் செலுத்தியவர்களில் பலர், பணத்தை திரும்ப கேட்டனர். ஆனால், அந்த பணம் கட்சியின் வளர்ச்சி நிதி என்று மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், விருப்ப மனுக்களுக்கு பெற்ற கட்டணத்தை திருப்பிக் கொடுக்க மக்கள் நீதி மய்யம் முடிவு செய்துள்ளது. அதன்படி, நாளை முதல் வரும் 16-ஆம் தேதிக்குள் சென்னை தலைமை அலுவலகத்திற்கு வந்து, கட்டிய பணத்தைப் பத்திரமாக வாங்கிச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் இந்த நியாயமான முடிவால், பணத்தை கட்டிவிட்டு, தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பும் கிடைக்காமல் பறிதவித்த பலருக்கு பெரும் ஆறுதல் அளித்துள்ளது.