X

மன்னார்குடி அமமுக சட்டமன்ற உறுப்பினர் காணவில்லை – ஆளுநரிடம் புகார் அளித்த டிடிவி தினகரன்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் தமிழக வெற்றி கழக வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற மன்னார்குடி தொகுதி அமமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ். காமராஜைக் காணவில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சி அமைப்பதற்கான மெஜாரிட்டியை நிரூபிக்க ஒரு சில இடங்களே தேவைப்படும் நிலையில், காமராஜ் மாயமானதன் பின்னணியில் தவெகவினர் இருக்கலாம் எனச் சந்தேகம் எழுப்பியுள்ள தினகரன், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரை வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகக் கடிதம் வழங்கியிருந்த நிலையில், மர்மமான முறையில் சட்டமன்ற உறுப்பினர் காணாமல் போயிருப்பது தமிழக அரசியலில் குதிரை பேர அச்சத்தையும், குழப்பத்தையும் அதிகரித்துள்ளது.