இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் முடிவடைய உள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற இருக்கும் 6 அணிகள் எவை ? என்பதில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற ஆர்.சி.பி – பஞ்சாப் கிங்ஸ் போட்டியில், ஆர்.சி.பி வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது.
ஆர்.சி.பி 13 போட்டிகள் விளையாடி 9 வெற்றியுடன் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணி 13 போட்டிகளில், 6 வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது. இதனால், இந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. கடைசி லீக் போட்டியில் லக்னோவை எதிர்கொள்ள உள்ள பஞ்சாப் கிங்ஸ், இதில் வெற்றி பெற்றால் 15 புள்ளிகளுடன் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். அதை பொறுத்தே இந்த அணியின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு தெரிய வரும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 6 வது இடத்தில் உள்ளது. அடுத்து லக்னோ, மும்பை ஆகிய அணிகளுடன் விளையாட உள்ளது. இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பு குறித்து நினைத்து பார்க்க முடியும்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் 13 போட்டிகளில், 6-ல் வெற்றி பெற்றுள்ளது. கடைசி லீக் போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்ள உள்ளது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து தெரிய வரும்.
குஜராத் டைட்டன்ஸ் 13 போட்டிகளில், 8-ல் வெற்றி பெற்றுள்ளது. தற்போது 2 வது இடத்தில் உள்ளது. ஏறக்குறைய பிளே ஆஃப் வாய்ப்பை பெற்றுள்ளது என்றாலும், கடைசி போட்டியில் சி.எஸ்.கே அணியுடன் மோத உள்ளது. இதில் வெற்றி பெற்றால் வாய்ப்பு உறுதி செய்யப்படும். இல்லை என்றால் மற்ற அணிகளின் முடிவு மற்றும் ரன் ரேட்டிற்காக காட்திருக்க வேண்டும்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 12 போட்டிகளில் 7-ல் வெற்றி பெற்று 3 வது இடத்தில் உள்ளது. ஆர்.சி.பி, சி.எஸ்.கே-வுக்கு எதிராக விளையாட உள்ளது. இரண்டிலும் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்யும். குறிப்பாக சி.எஸ்.கேவை வீழ்த்தினாலே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து விடுவதோடு, அந்த அணியை தொடரில் இருந்து வெளியேற்றவும் செய்யும்.
சி.எஸ்.கே அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் குஜராத்துக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த இரண்டு போட்டிகளின் முடிவு மிக முக்கியமானது. இன்று ஐதராபாத்தை எதிர்கொள்கிறது. இதில் சி.எஸ்.கே தோல்வியடைந்தால் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழக்க வாய்ப்புள்ளது.