X

ராகுல் காந்திக்கு ஜெர்சியை பரிசளித்த மெஸ்ஸி

அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, நேற்று இரவு உப்பல் மைதானத்தில் தெலங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அணியுடன், மெஸ்ஸியின் அணி நட்பு போட்டியில் விளையாடியது.

இந்தப் போட்டியை பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டு களித்தார். இதற்காக ராகுல் காந்தி நேற்று மாலை சிறப்பு விமானம் மூலம் ஐதராபாத் வந்தடைந்தார்.

இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியை கால்பந்து வீரர் மெஸ்ஸி நேரில் சந்தித்தார். அப்போது மெஸ்ஸி தனது கையெழுத்திட்ட ஜெர்சியை ராகுல் காந்திக்கு பரிசாக அளித்தார்.