சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (CMRL) சார்பில் 220 சிற்றுந்துகள் (Mini Buses) விரைவில் இயக்கப்பட உள்ளன. பணமில்லாப் பரிமாற்றம் மற்றும் நடத்துனர் இல்லாத நவீன வசதிகளுடன் வரவிருக்கும் இந்தச் சிற்றுந்துகள், மெட்ரோ நிலையங்களைச் சுற்றியுள்ள 6 முதல் 8 கிலோமீட்டர் சுற்றளவுக்கு இணைப்புச் சேவையை வழங்கும்.
கோயம்பேடு, திருமங்கலம், விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர், விம்கோ நகர், அசோக் நகர், சைதாப்பேட்டை மற்றும் லிட்டில் மவுண்ட் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் இந்தச் சேவை அமல்படுத்தப்பட உள்ளது.
பயணிகளின் வசதிக்காக அறிமுகப்படுத்தப்படும் இந்தத் திட்டம், சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதோடு, கடைசி மைல் இணைப்புச் சிக்கலுக்கும் ஒரு சிறந்த தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.