தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பணியில் இருந்து விலக கோரி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தின் மகர் துவாரில் இருந்து தேர்தல் ஆணையத் தலைமையகமான நிர்வாச்சன் சதன் நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்றனர்.
வழிநெடுகிலும் அமைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்புகளைக் கடந்து ஆகாஷவாணி பவன் வளாகத்திற்குள் நுழைய முயன்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி எம்பி ஜியா-வுர்-ரஹ்மான் பார்க் உள்ளிட்ட தலைவர்களை தில்லி காவல்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதை அடுத்து, தலைவர்கள் அனைவரும் அப்பகுதியில் சாலையில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் படிவம் 6 மாற்றம் தொடர்பான முறைகேடு புகார்களை முன்வைத்து ‘ஜனநாயகத்தைக் காப்போம்’ என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இப்போராட்டத்தில், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் பங்கேற்ற நிலையில், அப்பகுதியில் பலத்த போலீஸ் மற்றும் அதிரடிப்படை பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.