X

சென்னை, வளசரவாக்கத்தில் புதிய மேக்ஸ் ஃபேஷன் ஸ்டோர்! – நடிகை கயாடு லோஹர் திறந்து வைத்தார்

மேக்ஸ் ஃபேஷன் நிறுவனம், சென்னை வளசரவாக்கத்தில் தனது புதிய கிளையைத் தொடங்கியதன் மூலம் ஃபேஷன் மற்றும் திரைப்பட கலாச்சாரத்தை ஒன்றிணைத்தது. சென்னையின் ஆழமான சினிமா பற்றை மையமாகக் கொண்டு இந்தத் திறப்பு விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக, நடிகை கயாடு லோஹர் வியக்கத்தக்க வகையில் மேடையில் தோன்றினார். அவரது துடிப்பான திரை ஆளுமையும் வளரும் புகழும் அந்த மாலைப் பொழுதிற்கு ஒரு நட்சத்திர அந்தஸ்தைத் தந்தது.

சென்னையில் மேக்ஸ் ஃபேஷன் பிராண்டின் 34-வது கிளையாக இது அமைந்துள்ளது. ஒரு சாதாரண கடைத் திறப்பு விழா என்ற வழக்கமான முறையைத் தாண்டி, சென்னையின் துடிப்பான திரைப்பட கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு சினிமா கொண்டாட்டமாக இவ்விழா மாற்றப்பட்டது. அதே வேளையில், புதிய அடையாளத்துடன் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட மேக்ஸ் ஃபேஷனின் புதிய விற்பனை தளத்தை வாடிக்கையாளர்களுக்கு இவ்விழா அறிமுகப்படுத்தியது.

அந்த மாலைப் பொழுது ஒரு திரைப்படத்தின் முதல் காட்சியைக் போலவே அரங்கேறியது. தமிழ் சினிமாவின் அடையாளங்களான போஸ்டர்கள், கட்-அவுட்கள், சினிமா டிக்கெட் வடிவிலான நுழைவுகள், பாப்கார்ன் கவுண்டர்கள் மற்றும் பழைய தியேட்டர் பாணியிலான அம்சங்கள் என ஒரு படத்தின் முதல் நாள் வெளியீட்டிற்கான பரபரப்பை அங்கு வந்த விருந்தினர்கள் உணர்ந்தனர். நுழைவாயிலில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ ரிக்ஷாக்கள் உள்ளூர் கலாச்சாரத்தை வெளிப்படுத்தின. அதே நேரத்தில், ஸ்டோரின் உள்ளே அமைக்கப்பட்டிருந்த பல்வேறு சுவாரஸ்யமான இடங்கள், விருந்தினர்களையும் படைப்பாளர்களையும் அந்த அனுபவத்தை ரசிக்கவும், புகைப்படம் எடுக்கவும் மற்றும் அதில் ஒன்றிணையவும் தூண்டின.

நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களின் ஆரவாரம் மற்றும் கரகோஷங்களுக்கு இடையே, வளசரவாக்கத்தில் மேக்ஸ் ஃபேஷனின் புதிய கடையை கயாடு லோஹர் ரிப்பன் வெட்டி முறைப்படி திறந்து வைத்தார்.

மேக்ஸ் ஃபேஷன் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு.சுமித் சந்தன் பகிர்ந்துகொண்டதாவது, “சென்னை எப்போதும் எங்களின் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் கலாச்சார ரீதியாக துடிப்பான சந்தைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. வளசரவாக்கம் ஸ்டோர் திறப்பு விழா, வளர்ந்து வரும் ஃபேஷன் சமூகத்துடன் இணைந்து பயணிக்கும் எங்களது தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. இந்தத் திறப்பு விழாவின் மூலம், வெறும் விற்பனை தளத்தை மட்டும் உருவாக்க நாங்கள் விரும்பவில்லை; இந்த நகரத்தின் சினிமா மற்றும் கதைகூறல் மீதான காதலை அடிப்படையாகக் கொண்ட ஒரு அனுபவத்தை வடிவமைக்க விரும்பினோம். ஃபேஷன் மற்றும் சினிமா கொண்டாட்டத்தை ஒன்றிணைப்பதன் மூலம், இன்றைய வாடிக்கையாளர்கள் ஸ்டைலை அணுகும் விதத்திற்கு ஏற்ப, இந்தத் திறப்பு விழாவை மறக்க முடியாததாகவும், அனைவரையும் ஈர்க்கக்கூடியதாகவும் மாற்ற முயற்சித்தோம்”, என்றார்.

கன்னடம், மலையாளம், தெலுங்கு, மராத்தி மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படும் கயாடு லோஹர், எதார்த்தத்தையும் நட்சத்திர அந்தஸ்தையும் சரிசமமாகப் பெற்றுள்ள புதிய தலைமுறை கலைஞர்களின் அடையாளமாகத் திகழ்கிறார். அவரது இளமைத் துடிப்பு, வசீகரமான ஸ்டைல் மற்றும் ‘ஜென்-ஜீ’ (Gen Z) ரசிகர்களுடனான அவரது நெருக்கமான தொடர்பு ஆகியவை ஃபேஷன், ரசிகர்கள் மற்றும் பாப் கலாச்சாரம் இயல்பாக இணையும் இந்த மாலைப் பொழுதிற்குப் பொருத்தமாக அமைந்தன.

நடிகை கயாடு லோஹர் கூறுகையில், “இந்தத் திறப்பு விழாவில் பங்கேற்பது மிகவும் சிறப்பாக உணர்கிறேன், ஏனெனில் இது சென்னை மக்கள் உண்மையாக நேசிக்கும் சினிமா மற்றும் ஃபேஷன் ஆகிய இரண்டையும் கொண்டாடுகிறது. இந்த மாலைப் பொழுதின் உற்சாகம், ரசிகர்களின் வரவேற்பு மற்றும் சினிமா பாணியிலான அறிமுகம் ஆகியவை ஒரு திரைப்படத் தருணத்திற்குள் நுழைந்தது போன்ற உணர்வைத் தந்தன. மேக்ஸ் ஃபேஷன் என்பது அனைவரும் எளிதில் அணுகக்கூடிய, வெளிப்படையான மற்றும் இளமைத் துடிப்புள்ள ஸ்டைலைப் பிரதிபலிக்கிறது. இது மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் ஃபேஷனைப் பரிசோதித்துப் பார்க்க எளிதாக அமைகிறது. இங்குள்ள அனைவருடனும் உரையாடியதும், இந்த ஸ்டோரை நேரில் அனுபவித்ததும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது”, என்றார்.

14,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளசரவாக்கம் ஸ்டோர், விசாலமானதாகவும், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டதாகவும் மற்றும் வாடிக்கையாளர்கள் எளிதாகச் சுற்றிப் பார்த்து பொருட்களைத் தேர்வு செய்யும் விதமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தனித்தனிப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளதால், குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் சிரமமின்றி தங்களுக்குத் தேவையான ஆடைகளைத் தேடித் தேர்ந்தெடுக்கலாம். இதன் திறந்தவெளி அமைப்பு மற்றும் நவீன வடிவமைப்பு, மேக்ஸ் ஃபேஷனில் ஷாப்பிங் செய்யும் அனுபவத்தை மிகவும் வசதியானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் மாற்றுகிறது.

சென்னை எப்போதும் மேக்ஸ் ஃபேஷனின் மிக வலுவான சந்தைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இங்குள்ள இளைஞர்கள் மற்றும் புதிய டிரெண்டுகளைப் பின்பற்றும் வாடிக்கையாளர்கள், எளிதில் அணுகக்கூடிய அதே சமயம் தங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்தும் ஃபேஷனை விரும்புகின்றனர். அவர்களின் இந்த மனநிலையைப் பூர்த்தி செய்யும் வகையில், அலுவலகம் முதல் சமூக நிகழ்வுகள் வரை அன்றாட வாழ்வின் அனைத்துத் தருணங்களுக்கும் ஏற்ற பலதரப்பட்ட ஸ்டைல்களை இந்த புதிய ஸ்டோர் வழங்குகிறது.