X

சென்னை பெருநகரப் பரப்பளவை ஐந்து மடங்காக விரிவுப்படுத்த புதிய திட்டம்!

சென்னை பெருநகரப் பரப்பளவை ஐந்து மடங்காக அதாவது ஐந்தாயிரத்துத் தொள்ளாயிரத்து நான்கு சதுர கிலோமீட்டராக விரிவுபடுத்தி அடுத்த இருபது ஆண்டுக்கால வளர்ச்சிக்காக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் புதிய பெருந்திட்டத்தை உருவாக்கவுள்ளது.

பழவேற்காடு முதல் மாமல்லபுரம் வரை நீண்டிருக்கும் கடற்கரைப் பகுதிகளில் புதிய பொதுக் கடற்கரைகள், பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் கடற்கரைச் குடில்களை உருவாக்கும் நோக்கில் உலகளாவிய ஆலோசகர் ஒருவர் விரைவில் நியமிக்கப்பட உள்ளார்.

செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை இந்த விஸ்தரிப்புப் பகுதிக்குள் இணைத்து எதிர்கால குடியிருப்பு, வணிகம் மற்றும் தொழில்துறை மண்டலங்களை வெள்ளத் தடுப்பு முறைகளுடன் கட்டமைக்க விரிவான திட்டமிடல் செய்யப்படுகிறது.

ஏற்கனவே உள்ள ஆயிரத்து நூற்று எண்பத்தொன்பது சதுர கிலோமீட்டர் பரப்பு முழுமையாக நிரம்பிவிட்டதால், பெங்களூரு போன்ற தீவிரமான போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் ஒருங்கிணைந்த சாலை வலையமைப்புகளை உருவாக்குவதோடு, இறுதி மைல் இணைப்பு மற்றும் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு இந்தத் திட்டம் முக்கியத்துவம் அளிக்கிறது.