X

உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு

உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக மூத்த பெண் வழக்கறிஞர் வெங்கட சுப்ரமணி மோகனாவுடன் சேர்த்து, மேலும் 4 உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் என மொத்தம் 5 புதிய நீதிபதிகள் இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்டனர்.

புதுடெல்லியில் உள்ள உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில், இந்தியத் தலைமை நீதிபதி (CJI) சூர்ய காந்த், புதிய நீதிபதிகள் அத்தனை பேருக்கும் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த முக்கியப் பட்டியலில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷீல் நாகு, மும்பை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் சச்தேவா, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அருண் பல்லி மற்றும் மூத்த வழக்கறிஞரான வெங்கட சுப்ரமணி மோகனா ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகப் பொறுப்பேற்றுள்ளனர். வழக்கறிஞர் பதவியிலிருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக வெங்கட சுப்ரமணி மோகனா உயர்த்தப்பட்டிருப்பதுடன், இந்த நியமனங்களின் மூலம் உச்ச நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த உயர் பதவியேற்பு விழாவில் உச்ச நீதிமன்றத்தின் சக நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் சட்டத்துறை முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு புதிய நீதிபதிகளுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.