X

விரைவில் அறிமுகமாக இருக்கும் மாருதியின் புதிய வேகன் ஆர் கார்!

மாருதி நிறுவனத்தின் புதிய வேகன் ஆர் கார் இந்தியாவில் பலமுறை சோதனை செய்யப்படும் நிலையில் இதன் வெளியீட்டு விவரம் தெரியவந்துள்ளது. அதன்படி புதிய வேகன் ஆர் மாடல் இந்தியாவில் 2019-ம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் கூறப்படுகிறது.

புதிய வேகன் ஆர் மாடல் எர்டிகா மாடலின் கீழ் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கார் குறித்து மாருதி சுசுகி எவ்வித தகவலும் வழங்காத நிலையில், புதிய வேகன் ஆர் மாடலில் ஏழு பேர் வரை அமரக்கூடிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்பட்டது.

இந்திய சோதனையின் போது எடுக்கப்பட்ட படங்களில் காரின் விவரங்கள் வெளியானது. அதன்படி புதிய தலைமுறை சுசுகி சோலியோ ஏற்கனவே ஜப்பானில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காரில் புதிய ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ மற்றும் புதிய தலைமுறை எர்டிகா மாடல்களில் வழங்கப்பட்ட ஹார்டெக்ட் பிளாட்ஃபார்ம் வழங்கப்பட்டுள்ளது.

காரின் முன்பக்கம் ஜப்பான் நாட்டு வழக்கப்படி காட்சியளிக்கிறது. சிறிய பொனெட், தடித்த க்ரோம் ஸ்லாட் க்ரில் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஸ்லைடர் கதவுகள் வழங்கப்பட்டுள்ளது. சோலியோ மாடலில் ஐந்து பேர் பயணம் செய்ய முடியும். உள்புறமும், வெளிப்புறத்தை போன்றே மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி உள்புறத்தின் மத்தியில் சென்டர் கன்சோலில் மவுன்ட் செய்யப்பட்ட கியர் ஸ்டிக் கொண்டிருக்கிறது. தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டாப் என்ட் வேரியன்ட்-இல் வழங்கப்படும் என தெரிகிறது.

புதிய சோலியா மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டார் மற்றும் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் 91 பி.எஸ். மற்றும் 118 என்.எம். டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை AMT மற்றும் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

Tags: south news