X

மீண்டும் வருகிறது கோகோ கோலாவின் ‘கோல்ட் ஸ்பாட்’ பானம்!

இந்தியாவில் பல ஆண்டுகளுக்குப் பிறகு கோகோ-கோலா (Coca-Cola) நிறுவனம் தனது புகழ்பெற்ற ஆரஞ்சு நிற குளிர்பானமான ‘கோல்ட் ஸ்பாட்’ (Gold Spot) பானத்தை மீண்டும் சந்தையில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

1952-ஆம் ஆண்டு பார்லே (Parle) நிறுவனத்தால் தொடங்கப்பட்டு ‘தி ஜிங் திங்’ (The Zing Thing) என்ற விளம்பர வாசகத்துடன் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இப்பானம், 1993-இல் கோகோ-கோலா நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது. பின்னர் தனது உலகளாவிய தயாரிப்பான ஃபான்டா (Fanta) பானத்திற்குப் போட்டியாக இருக்கக் கூடாது என்பதற்காக 2000-ஆம் ஆண்டில் கோல்ட் ஸ்பாட் விற்பனையை கோகோ-கோலா நிறுத்தியது.

தற்போது சுமார் 26 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு, ஃபான்டா விற்பனையைப் பாதிக்காத வகையிலும், இன்றைய நுகர்வோரின் ஆரோக்கிய விழிப்புணர்வுக்கு ஏற்பவும் குறைந்த சர்க்கரை (Low-Sugar) அல்லது சர்க்கரையில்லா (No-Sugar) வடிவத்தில் கோல்ட் ஸ்பாட் மீண்டும் கொண்டுவரப்படுகிறது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ‘கேம்பா’ (Campa) குளிர்பானத்தின் தீவிரப் போட்டியைச் சமாளிக்கவும், 90-களின் பசுமையான நினைவுகளை (Nostalgia) மீட்டெடுத்து விற்பனையை அதிகரிக்கவும் கோகோ-கோலா இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.