இந்தியாவில் OPPO F Series அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், OPPO நிறுவனம் இன்று OPPO F35 Pro மற்றும் OPPO F35 ஆகிய மாடல்களை உள்ளடக்கிய புதிய OPPO F35 Series மொபைல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில், இந்த F சீரிஸ் தனது முதல் தலைமுறை F1 மாடலின் மூலம் “செல்ஃபி எக்ஸ்பர்ட்” (Selfie Expert) என்ற அடையாளத்துடன் தொடங்கி, இன்று புதிய F35 சீரிஸ் மூலம் “குரூப் செல்ஃபி எக்ஸ்பர்ட்” (Group Selfie Expert) ஆக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. நுகர்வோர் தங்களின் அழகான தருணங்களைப் படம் பிடிப்பதிலும், பகிர்ந்து கொள்வதிலும் மற்றும் அனுபவிப்பதிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இந்த புதிய சீரிஸ் மிகச்சரியாகப் பிரதிபலிக்கிறது.
F1 மாடலில் தொடங்கி, தற்போது அறிமுகமாகியுள்ள புதிய F35 சீரிஸ் வரை, இந்தியாவின் இளம் தலைமுறையினரின் மாறிவரும் தேவைகள், டிஜிட்டல் வாழ்க்கை முறை மற்றும் அன்றாடப் பயன்பாட்டு எதிர்பார்ப்புகளைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ற புதுமையான தொழில்நுட்ப அனுபவங்களை வழங்கும் வகையில் இந்த சீரிஸ் தொடர்ந்து பரிணாமம் அடைந்து வருகிறது. இந்த F சீரிஸ் தனது சிறப்புமிக்க கேமரா அம்சங்களைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 3 கோடிக்கும் அதிகமான (30 million+) F சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், ஸ்மார்ட்போன்களைத் தனிப்பட்ட தருணங்களைப் படம் பிடிக்கக் கேமராவாக மட்டும் பயன்படுத்தாமல், தங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் அனுபவங்களை உருவாக்கவும், இணையவும், பகிர்ந்து கொள்ளவும் விரும்பும் ஒரு தலைமுறையினரோடு சேர்ந்தே இந்த சீரிஸும் வளர்ந்துள்ளது. இந்த பயணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், புதிய F35 சீரிஸ் 50MP அல்ட்ரா-வைட் நேச்சுரல் செல்ஃபி கேமராவுடன் (50MP Ultra-Wide Natural Selfie Camera) 100° ஃபீல்ட் ஆஃப் வியூ (100° field of view) வசதியைக் கொண்டுள்ளது. இது ஒவ்வொரு ஃபிரேமிலும் அதிக நபர்களையும், அந்தத் தருணத்தின் முழு அழகையும் மிக எளிதாகக் கொண்டுவருகிறது.
OPPO F35 சீரிஸ் – OPPO F35 Pro 5G மாடலின் 6GB+128GB வேரியன்ட் ரூ.45,999, 8GB+128GB வேரியன்ட் ரூ.49,999 மற்றும் 8GB+256GB வேரியன்ட் ரூ.54,999 என்ற விலையில் கிடைக்கும். அதேபோல், OPPO F35 5G மாடலின் 6GB+128GB வேரியன்ட் ரூ.38,999 மற்றும் 8GB+128GB வேரியன்ட் ரூ.42,999 என்ற விலையில் கிடைக்கும். OPPO F35 சீரிஸ் 11 அக்டோபர் 2026 முதல், நாடு முழுவதும் உள்ள முக்கிய சில்லறை விற்பனை நிலையங்கள், OPPO இந்தியா இணையவழி விற்பனைத்
தளம், Flipkart மற்றும் Amazon ஆகியவற்றில் விற்பனைக்கு கிடைக்கும்.OPPO F35 Pro 5G மாடல் Sunrise Orange, Wave Blue மற்றும் Twilight Brown ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும். OPPO F35 5G மாடல் Wave Blue, Titanium Grey மற்றும் Mist Pink ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் 10% வரை உடனடி பணத்தள்ளுபடி, வட்டி இல்லாத மாதத் தவணை வசதி, 10% வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் முன்பணம் இல்லாத கட்டணத் திட்டங்கள் ஆகியவற்றுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட OPPO தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு வழங்கப்படும் கூடுதல் பண்டிகைக்கால சலுகைகளையும் பெறலாம்.
அறிமுகம் குறித்து OPPO இந்தியாவின் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் திரு. கோல்டி பட்நாயக் கூறியதாவது: “கடந்த 10 ஆண்டுகளில், இந்தியா முழுவதும் உள்ள நுகர்வோர் தங்களது வாழ்க்கையின் முக்கிய தருணங்களைப் படம் பிடிக்கும், தொடர்பு கொள்ளும் மற்றும் பகிர்ந்து கொள்ளும் விதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுடன் இணைந்து F சீரிஸும் தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியா போன்ற பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட நாட்டில், ஒவ்வொரு பிராந்தியமும் ஒன்றிணைந்து கொண்டாடுவதற்கென தனித்துவமான வழிமுறையைக் கொண்டுள்ளது. வளமான குடும்ப கலாச்சாரம், பண்டிகைகள் மற்றும் அனைவரும் இணைந்து பகிர்ந்து கொள்ளும் தருணங்களைக் கொண்ட தமிழ்நாடு, இந்த உணர்வின் சிறந்த பிரதிபலிப்பாகத் திகழ்கிறது. 50MP அல்ட்ரா-வைடு நேச்சுரல் செல்ஃபி கேமரா மற்றும் 100° காட்சிப் பரப்புடன், ஒவ்வொரு புகைப்படச் சட்டகத்திலும் அதிகமான நபர்களையும், அந்தத் தருணத்தின் அதிகமான பகுதிகளையும் இடம்பெறச் செய்யும் வகையில் F35 சீரிஸ் இந்தப் பரிணாம வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்கிறது. ‘குரூப் செல்ஃபி எக்ஸ்பர்ட்’ அம்சத்தின் மூலம், இன்றைய நுகர்வோர் ஒன்றிணைந்து, கொண்டாடி, நினைவுகளை உருவாக்கும் விதத்தைப் பிரதிபலிக்கும் வகையில், F சீரிஸின் பத்தாண்டு காலப் படமெடுப்பு பாரம்பரியத்தை நாங்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்கிறோம்.”
மாறிவரும் நுகர்வோர் தேவைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட F-சீரிஸின் ஒரு தசாப்தம்
இந்தியாவில் F சீரிஸ் மேற்கொண்டுள்ள 10 ஆண்டுகாலப் பயணம், “ஸ்மார்ட்போன் புகைப்படத் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தையும், இந்திய நுகர்வோரின் மாறிவரும் எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிக்கிறது. தொடக்கத்தில் செல்ஃபி அனுபவங்களுக்கு முக்கியத்துவம் அளித்ததிலிருந்து, நவீன புகைப்படத் தொழில்நுட்ப வசதிகள் நீடித்த செயல்திறன் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற வசதிகளை நுகர்வோருக்கு வழங்குவது வரை, F சீரிஸ் காலத்திற்கேற்ப தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்தப் பயணத்தின் அடுத்த அத்தியாயமாக F35 சீரிஸ் அறிமுகமாகிறது. இன்றைய நுகர்வோர் தங்களது தருணங்களைப் படம் பிடிக்கும் விதத்திற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட கேமரா அனுபவத்தையும், நீண்ட கால அன்றாடப் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட சிறப்பம்சங்களையும் இது ஒருங்கிணைக்கிறது.
இந்த வளர்ச்சியானது, இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் OPPO தொடர்ந்து வலுவான முன்னேற்றத்தைப் பதிவு செய்து வரும் நிலையில் ஏற்பட்டுள்ளது. IDC-யின் Worldwide Quarterly Mobile Phone Tracker (Q1 2026) அறிக்கையின்படி, OPPO ஆண்டுக்கு ஆண்டு 22% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது முன்னணி ஐந்து ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் பதிவான அதிகபட்ச வளர்ச்சியாகும். இதே காலகட்டத்தில், OPPO-வின் சந்தைப் பங்கு முந்தைய ஆண்டின் 12.0% இலிருந்து 15.3% ஆக அதிகரித்துள்ளது. சமீபத்திய IDC இந்திய ஸ்மார்ட்போன் சந்தை தரவுகளின்படி, ரூ.20,000- க்கும் அதிகமான விலைப் பிரிவில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக, OPPO 13.8% சந்தைப் பங்குடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்த முன்னேற்றங்கள் அனைத்தும், வேகமாக வளர்ச்சியடைந்து வரும் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் OPPO தொடர்ந்து வலுவான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதை எடுத்துக்காட்டுகின்றன. தமிழ்நாட்டில் OPPO அனுபவத்தை மேலும் வலுப்படுத்துதல்
தமிழ்நாடு எப்போதும் ஒப்போ (OPPO) நிறுவனத்திற்கு ஒரு முக்கியமான சந்தையாக இருந்து வருகிறது. இதற்கேற்ப, நிறுவனம் மாநிலம் முழுவதும் தனது வாடிக்கையாளர் தொடர்பு மையங்களைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. ஒப்போ நிறுவனம் தற்போது தமிழ்நாடு முழுவதும் 42 பிரத்யேக சேவை மையங்களை (Exclusive Service Centres) கொண்டுள்ளதன் மூலம், வாடிக்கையாளர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே பிரத்யேக விற்பனைக்குப் பிந்தைய ஆதரவை (After-sales support) வழங்கி வருகிறது. இது, இந்தியா முழுவதும் 500-க்கும் மேற்பட்ட நகரங்களில் 620-க்கும் அதிகமான சேவை மையங்களைக் கொண்டு, 19 மொழிகளில் வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றி வரும்
“ஒப்போ இந்தியாவின் விரிவான விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பின் முக்கிய அங்கமாக இது உள்ளது”
வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் நோக்கில், OPPO இந்தியா முழுவதும் அடுத்த தலைமுறை Service Center 3.0 Pro சேவை மையங்களின் வலையமைப்பையும் விரிவுபடுத்தி வருகிறது. ஏற்கனவே, 60-க்கும் மேற்பட்ட பிரீமியம் சேவை மையங்கள் 3.0 Pro அனுபவத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. மேலும், 2026ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் 150-க்கும் மேற்பட்ட புதிய Service Center 3.0 Pro மையங்கள் அமைக்க OPPO திட்டமிட்டுள்ளது.இந்தப் புதிய சேவை மைய அமைப்பு, வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதி மற்றும் வெளிப்படைத்தன்மையை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் டிஜிட்டல் முறையிலான பதிவு, உடனுக்குடன் வரிசை நிலவரத் தகவல்கள் மாறும் டிஜிட்டல் அறிவிப்புப் பலகைகள், மேம்பட்ட வசதிகள் மற்றும் வாடிக்கையாளர் தொடர்பு சேவை அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாட்டு வாடிக்கையாளர்களின் வசதிக்காக தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டு வரும் இந்த சேவை வலையமைப்பு (Service Ecosystem) ஒப்போவின் விரிவடைந்து வரும் தயாரிப்புகளுக்கு கூடுதல் பலமாக அமைகிறது. இது வாடிக்கையாளர்கள் போனை வாங்குவதோடு மட்டுமல்லாமல், அதற்குப் பிறகும் அவர்களுக்கான பிரத்யேக ஆதரவை மிக எளிதாகப் பெற வழிவகை செய்கிறது.
குரூப் செல்ஃபி எக்ஸ்பர்ட்: எல்லோரையும் ஒரே ஃபிரேமிற்குள் கொண்டுவருகிறது
புதிய F35 சீரிஸின் மிக முக்கிய அம்சமாக 50MP அல்ட்ரா-வைட் நேச்சுரல் செல்ஃபி கேமரா (50MP Ultra-Wide Natural Selfie Camera) 100° ஃபீல்ட் ஆஃப் வியூ (100° field of view) வசதியுடன் அமைந்துள்ளது. இது அதிக நபர்களையும், உங்களைச் சுற்றியுள்ள தருணத்தின் முழு அழகையும் ஒரே ஃபிரேமிற்குள் கொண்டுவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அல்ட்ரா-வைட் கேமராவிற்குத் துணையாக AI ஆட்டோ வைடு-ஆங்கிள் ஸ்விட்ச் (AI Auto Wide-Angle Switch) அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது குடும்ப விழாக்கள், பண்டிகைகள், திருமணங்கள், பயணங்கள் மற்றும் அன்றாடக் கொண்டாட்டங்களின் போது பெரிய குழுக்களை மிக எளிதாகப் படம் பிடிக்க உதவுகிறது.
OPPO F35 ப்ரோ 5G (OPPO F35 Pro 5G) மாடல் நேச்சுரல் டோன் 2.0 (Natural Tone 2.0) மற்றும் OIS தொழில்நுட்பத்துடன் கூடிய 50MP முதன்மை கேமரா (50MP Main Camera with OIS) மூலம் புகைப்பட அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. மேலும், விரிவான காட்சிகளைப் பதிவு செய்ய 8MP அல்ட்ரா-வைட் பின்புற கேமராவும் இதில் இடம்பெற்றுள்ளது. காணொளி படைப்பாளர்களுக்காக”, F35 ப்ரோ மாடலின் முன்புற மற்றும் பின்புற கேமராக்கள் இரண்டிலுமே 4K வீடியோ ரெக்கார்டிங் (4K Video Recording) வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அசையாத நிலையான வீடியோக்களை எடுக்க இதில் அல்ட்ரா-ஸ்டெடி மோட் (Ultra-Steady Mode) உள்ளது. இதிலுள்ள டூயல்-வியூ வீடியோ (Dual-View Video) அம்சம், முன்புற மற்றும் பின்புற கேமராக்கள் மூலம் ஒரே நேரத்தில் வீடியோவை பதிவு செய்ய அனுமதிக்கிறது. இதன் மூலம் ஒரு அழகான தருணத்தையும், அதற்கான உங்களின் சொந்த எதிர்வினையையும் (Reaction) ஒரே நேரத்தில் உங்களால் படம் பிடிக்க முடியும்.
F35 ப்ரோ மாடலானது போர்ட்ரெய்ட் மோட் (Portrait Mode) வசதியை அறிமுகப்படுத்துவதோடு, AI பாப்அவுட் (AI Popout) மற்றும் AI ரீமிக்ஸ் கொலாஜ் (AI Remix Collage) போன்ற ஆக்கப்பூர்வமான டூல்களையும் (Creative Tools) உள்ளடக்கியுள்ளது. இது வாடிக்கையாளர்கள் தங்களின் அன்றாடப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் எளிதாகப் பகிர்ந்து கொள்ளக்கூடிய வகையில் மிகவும் அழகாக மாற்ற உதவுகிறது.
OPPO F35 5G மாடலும் 100° FOV (ஃபீல்ட் ஆஃப் வியூ) கொண்ட 50MP அல்ட்ரா-வைட் முன்புற கேமரா மற்றும் 50MP முதன்மை பின்புற கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது இந்த “குரூப் செல்ஃபி எக்ஸ்பர்ட்&” (Group Selfie Expert) அனுபவத்தை இன்னும் கூடுதலான வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு சேர்க்கிறது.
நீண்ட நாள் பயன்பாட்டிற்கும் நீடித்த உழைப்பிற்கும் ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ளது புகைப்பட அனுபவத்தைத் தாண்டி, அன்றாடத் தேவைகளுக்கு ஏற்ற வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பல்வேறு அம்சங்களை F35 சீரிஸ் ஒருங்கிணைக்கிறது. OPPO F35 Pro மற்றும் F35 ஆகிய இரு மாடல்களிலும் 6 ஆண்டுகள் நீடிக்கும் 8000mAh பெரிய பேட்டரி மற்றும் 80W SUPERVOOC™ வேகமான சார்ஜிங் வசதி இடம்பெற்றுள்ளன. இதன் மூலம், நாள் முழுவதும் புகைப்படம் எடுப்பதுடிஜிட்டல் படைப்புகளை உருவாக்குவது, பொழுதுபோக்கு மற்றும் தகவல் தொடர்பு போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு இடையே தடையின்றி மாறிச் செயல்படத் தேவையான நீடித்த பேட்டரி செயல்திறனை நுகர்வோர் பெறுகின்றனர்.பேட்டரி அதன் உண்மையான திறனில் 80%-க்கும் அதிகமான திறனை, 1,800 முறை சார்ஜ் செய்த பின்னரும் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நீண்ட கால அன்றாடப் பயன்பாட்டிற்கு சிறந்த ஆதரவை வழங்குகிறது. மேலும், இந்த சீரிஸில் IP69K, IP69, IP68 மற்றும் IP66 தரங்களுடன் கூடிய நீர் மற்றும் தூசித் தடுப்பு வசதிகளும், மழையிலும் தொடுதிரை செயல்படும் வசதி மற்றும் ராணுவத் தர அதிர்வுகளைத் தாங்கும் திறன் வசதிகளும் இடம்பெற்றுள்ளன. எதிர்பாராத மழை, தண்ணீர் தெறித்தல் மற்றும் தவறுதலான கீழே விழுதல் உள்ளிட்ட அன்றாடச் சூழ்நிலைகளில் கூடுதல் நம்பிக்கையுடன் சாதனத்தைப் பயன்படுத்தும் வகையில் இந்த அம்சங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
F35 சீரிஸ் ColorOS 16 இயங்குதளத்தில் செயல்படுகிறது. இது உற்பத்தித்திறன், படைப்பாற்றல் மற்றும் அன்றாடப் பயன்பாட்டை எளிதாக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பல்வேறு கருவிகளை வழங்குகிறது. இதில் AI Recording, AI Ultra-Clear Documents, AI Call Guard மற்றும் One-Tap Security Guard உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
புதிய டிரினிட்டி இன்ஜின், கணினி வளங்களை மேலும் சிறப்பாக நிர்வகித்து, வேகமான மற்றும் தடையற்ற பயன்பாட்டு அனுபவத்தை வழங்க உதவுகிறது. அதேபோல், நீண்ட காலப் பயன்பாட்டிற்கான பராமரிப்பு 2.0 மற்றும் ஆறு ஆண்டுகளுக்கான சீரான செயல்திறன் பாதுகாப்பு ஆகியவை, நீண்ட காலப் பயன்பாட்டிலும் சாதனத்தின் செயல்திறனைத் தொடர்ந்து பராமரிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து செயல்படும் திறன்
OPPO F35 Pro 5G மாடல் MediaTek Dimensity 7360 MAX செயலியால் இயக்கப்படுகிறது. அதிக செயல்திறன் தேவைப்படும் பயன்பாடுகளின்போது வெப்பத்தை சிறப்பாக வெளியேற்ற உதவும் வகையில் 5000mm² SuperCool VC System இதில் இடம்பெற்றுள்ளது.F35 Pro மாடலில் 17.22 செ.மீ. 1.5K 144Hz AMOLED Ultra-Bright Display வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், F35 மாடலில் 16.69 செ.மீ. FHD+ 120Hz AMOLED Ultra-Bright Display இடம்பெற்றுள்ளது. இவை பொழுதுபோக்கு, உள்ளடக்கங்களைப் பார்வையிடுதல் மற்றும் அன்றாடப் பயன்பாடு ஆகியவற்றில் மென்மையான மற்றும் தெளிவான காட்சிகளை வழங்குகின்றன.