இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி, எதிர்க்கட்சிகள் மீண்டும் ஒரு புதிய நோட்டீஸை வழங்கத் திட்டமிட்டு வருகின்றன. முன்னதாக மார்ச் 12-ஆம் தேதி 193 எம்.பி-க்களின் கையொப்பத்துடன் அளிக்கப்பட்ட நோட்டீஸை, போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஏப்ரல் 6-ஆம் தேதி நிராகரித்தனர்.
இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் பாரபட்சம் மற்றும் புதிய முறைகேடு புகார்களை முன்வைத்து, தி.மு.க., காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றன.
முந்தைய நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கூடுதல் சட்ட பலத்துடன் புதிய தீர்மானத்தைக் கொண்டு வர எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.