X

ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பெண் தேர்வர்கள் தேர்ச்சி பெற்று சாதனை!

கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த ஆண்டு JEE Advanced தேர்வில் 10,000-க்கும் மேற்பட்ட பெண் தேர்வர்கள் தேர்ச்சி பெற்று புதிய சாதனை படைத்துள்ளனர். ஐஐடி ரூர்க்கி தயாரித்து வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இத்தேர்வுக்குப் பதிவு செய்த 43,112 பெண் தேர்வர்களில் 40,562 பேர் இரு தாள்களையும் எழுதிய நிலையில், அதில் மொத்தம் 10,107 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதன் மூலம் பெண் தேர்வர்களின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டின் 21.7 சதவீதத்தில் இருந்து இந்த ஆண்டு 23.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. தேர்ச்சி பெற்றவர்களில் 3,814 பெண்கள் ஐஐடிகளில் சேர்க்கை பெற்று சாதனை படைத்துள்ளனர்; இது மொத்த ஐஐடி சேர்க்கையில் 20.22 சதவீதம் ஆகும்.

அகில இந்திய அளவில் 77-வது ரேங்க் (AIR 77) பெற்ற பெண் தேர்வர், 360 மதிப்பெண்களுக்கு 280 மதிப்பெண்கள் பெற்று பெண்களுக்கான பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த பத்தாண்டுகளில் (2016-ல் 4,570 பெண்கள்) பெண் தேர்வர்களின் தேர்ச்சி எண்ணிக்கை 121 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.