புதுமுகங்களுக்கு நிறைய வாய்ப்பு கொடுக்க வேண்டும் – பேரரசு வேண்டுகோள்

சமூக வலைதளங்களின் பாதிப்புகள் பற்றி விளக்கும் வகையில் வேறென்ன வேண்டும் என்ற படம் உருவாகி இருக்கிறது. நரேன் ராம்தேஜ், பியர்னா கன்னா, தர்‌ஷன் நடிப்பில் பாரதிகுமார் இயக்கத்தில் அனுமனி, சலாதிமா ரெட்டி தயாரிப்பில் இப்ப்படம் உருவாகி இருக்கிறது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குனர்கள் பேரரசு பேசும்போது, “இந்த படத்தின் இசை, டிரெய்லரை பார்த்தால் சின்ன படம் போலவே தெரியவில்லை. சிறிய பட இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள். புதுமுகங்களுக்கு நிறைய வாய்ப்பு கொடுங்கள். முன்பெல்லாம் நடிகர்கள் கதை கேட்பார்கள். ஆனால் இப்போது மேடையில் கதை சொல்ல தொடங்கி இருக்கிறார்கள். டைரக்டர் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறோம். இந்த படம் மக்களுக்கு பெரிய விழிப்புணர்வு படமாக இருக்கும்.” என்று பேசினார்.

இந்த படத்தின் கதாநாயகி பியர்னா டெல்லியை சேர்ந்தவர். அறிமுகமாகும் வேறென்ன வேண்டும் படம் வெளிவரும் முன்பே 3 தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools
Tags: Cinema news