X

பொங்கலுக்கு வெளியாகும் ரஜினியின் ‘பேட்ட’

‘காலா’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ‘பேட்ட’ படம் வரும் பொங்கல் பண்டிகையன்று வெளியாகும் என்று படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் இன்று அறிவித்திருக்கிறது.

சிம்ரன், திரிஷா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கும் ‘பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க, பாபி சிம்ஹா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.