X

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் கிழக்குப்பகுதியில் இன்று (ஏப்ரல் 2, 2026) காலை உள்ளூர் நேரப்படி 06:48 மணியளவில் ரிக்டர் அளவில் 7.4 அலகுகளாகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

மொலுக்கா கடல் பகுதியில் சுமார் 35 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நிலநடுக்கத்தின் தாக்கத்தால் வடக்கு சுலவேசி மாகாணத்தின் மனாடோ நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒரு பெண் உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

கடலோரப் பகுதிகளில் 75 செ.மீ உயரம் வரை சிறிய அளவிலான சுனாமி அலைகள் பதிவான நிலையில், சில மணி நேரங்களுக்குப் பிறகு சுனாமி ஆபத்து நீங்கியதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.