X

எடப்பாடி பழனிசாமிக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலடி!

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது குறித்து கூறிய எடப்பாடி பழனிசாமி, அரை சதவீதம் வாக்குகள் கூட இல்லாத கட்சி திமுக-வில் இணைந்துள்ளது, என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மதுரையில் இன்று பிரேமலதா விஜயகாந்திடம் எடப்பாடி பழனிசாமி கருத்து குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “எக்ஸ் முதல்வர் இன்னைக்கு எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். அவருடைய வார்த்தைகள் கண்ணியமாக, மற்றவர்கள் மதிக்கக்கூடிய அளவில் இருக்க வேண்டும். முதலமைச்சர் வேட்பாளராக இருக்கக் கூடியவர் மூன்றாம், நான்காம் கட்ட தலைவர்கள் போன்று பேசுவது கண்டிக்கத்தக்கது. மே 4 ஆம் தேதிக்குப் பின் அதற்கான பலனை அவர் அனுபவிப்பார்.

அரை சதவீதம் ஓட்டு என்று சொல்கிறார், உங்களுக்கு என்ன வயிறு எரியுது. வயிறு எரிந்து கருகிய வாசனை தமிழ்நாடு முழுவதும் வருது. அவ்வளவு வயிற்றெரிச்சல். முன்னதாக நாங்கள் என்.டி.ஏ மற்றும் அதிமுக கூட்டணியில் தானே இருந்தோம். இருக்கும் போது அருமை தெரியவில்லை. தற்போது திமுக கூட்டணிக்கு வந்ததும், வயிற்றெரிச்சல் பட்டு பொருமிக் கொண்டிருக்கிறார். முதலமைச்சர் வேட்பாளருக்கு இது அழகல்ல.

எங்களை ஐ.சி.யு கட்சி என்கிறார். மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவுக்குப் பிறகு அவர் ஐ.சி.யு-க்கு போகாமல் இருக்கனும்.” என்று பதிலடி கொடுத்துள்ளார்.