காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள ‘விக்ரமாதித்ய வேத கடிகாரத்தை’ (Vikramaditya Vedic Clock) பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் பார்வையிட்டார்.
சுமார் 700 கிலோ எடை கொண்ட இந்த பிரம்மாண்ட கடிகாரம், உஜ்ஜயினிக்கு அடுத்தபடியாக வாரணாசியில் அமைக்கப்பட்டுள்ள உலகின் இரண்டாவது வேத கடிகாரமாகும். இது சாதாரண 24 மணி நேர கால முறையைப் பின்பற்றாமல், சூரிய உதயம் முதல் அடுத்த சூரிய உதயம் வரையிலான நேரத்தை 30 ‘முஹூர்த்தங்களாக’ பிரித்துக் காட்டுகிறது. மேலும், இதில் திதி, நட்சத்திரம், கிரக நிலைகள் போன்ற வேத பஞ்சாங்கத் தகவல்களுடன் இந்திய நேரமும் (IST) துல்லியமாகக் கணக்கிடப்படுகிறது.
மத்தியப் பிரதேச அரசால் பரிசாக வழங்கப்பட்டு, கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி முறைப்படி நிறுவப்பட்ட இந்த நவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய வேத காலக் கணக்கீட்டு முறையைப் பிரதமர் மோடி ஆர்வத்துடன் பார்வையிட்டு அதன் சிறப்புகளைக் கேட்டறிந்தார்.