X

பெண்களுக்கு முன்னுரிமை – முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெண்கள் வாரி வழங்கிய பேராதரவிற்குப் பரிசு தரும் விதமாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பு வழக்குகளைக் கையாளுவதற்கு முழுமையாகப் பெண் வழக்கறிஞர்கள் மட்டுமே கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய குழுவை நியமிக்க முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

சமீபத்திய தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) வெற்றிக்குக் காரணியாக இருந்த பெண் வாக்காளர்களுக்குக் கைமாறு செய்யும் நோக்கில், உச்ச நீதிமன்றத்திற்கான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் (Additional AG) மற்றும் அரசு ஸ்டாண்டிங் கவுன்சில்கள் (Standing Counsels) ஆகிய மிக முக்கியப் பொறுப்புகள் அனைத்திற்கும் பெண்களையே நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

மாநில வரலாற்றிலேயே முதன்முறையாக உச்ச நீதிமன்ற சட்டப் பிரிவில் பெண்களுக்கே முழு முன்னுரிமை அளித்து முதல்வர் விஜய் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு, அரசியல் வட்டாரங்களில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறப்போவதோடு, பெண் சமூகத்தினரிடையே பெரும் வரவேற்பையும் பெறும் என்று நம்பலாம்.