பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைக் கண்டித்து, கேரள மாநிலம் திருச்சூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) தொழிலாளர் அமைப்பான ஏஐடியுசி (AITUC) தனியார் மோட்டார் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பிஎஸ்என்எல் அலுவலகம் நோக்கி பிரம்மாண்டப் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதிலும், மத்திய அரசு தொடர்ந்து எரிபொருள் விலையை உயர்த்திப் பொதுமக்களை வசிப்பதாகக் குற்றம் சாட்டி இந்த போராட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, எரிபொருள் விலை உயர்வுக்கு எதிரான தங்களின் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக, ஆவேசமடைந்த இடதுசாரி தொழிற்சங்கத் தொழிலாளர் ஒருவர் சாலையிலேயே மோட்டார் சைக்கிள் (பைக்) ஒன்றை தீயிட்டுக் கொளுத்தி தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.