X

’வந்தே பாரத் கார்கோ’ ரயிலின் முன்மாதிரி தயார்!

சென்னை ஐசிஎப் (ICF) தொழிற்சாலையில் அதிவேக சரக்கு போக்குவரத்தை இலக்காகக் கொண்டு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘வந்தே பாரத் கார்கோ’ ரயிலின் முதல் முன்மாதிரி (Prototype) தற்போது தயார் நிலையில் உள்ளது.

சரக்குகளை விரைவாகக் கொண்டு சேர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரயில், தனது முதல் சேவையை டெல்லி மற்றும் மும்பை நகரங்களுக்கு இடையே தொடங்க உள்ளது. வழக்கமான வந்தே பாரத் ரயில்களைப் போலவே 160 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட இந்த ரயில்கள், நேரத்தை மிச்சப்படுத்துவதோடு சரக்கு போக்குவரத்து துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.