சென்னை நீலாங்கரையில் இருக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் வீட்டு அருகே, நேற்று நள்ளிரவு பொதுமக்கள் திடீரென்று திரண்டு சாலை மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முதலமைச்சர் ஜோசப் விஜய் வீடு இருக்கும் சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட இசிஆர் (ECR) மற்றும் நீலாங்கரைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாவே மின்வெட்டு அதிகரித்து வரும் நிலையில், நேற்று இரவும் பல மணி நேரமாகியும் மின்சாரம் வராததாலயும், மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது முறையான பதில் கிடைக்காததாலும் கோபமடைந்த நீலாங்கரை மக்கள் தங்களோட குழந்தைகளை தூக்கிக்கிட்டு நள்ளிரவு தெருவுக்கு வந்து விட்டனர்.
முதலமைச்சர் வசிக்கும் தெருவோட மெயின் ஜங்ஷன்ல ஒன்னு திரண்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள், தவெக அரசுக்கு எதிராகவும் மின்வாரியத்தைக் கண்டிச்சும் விடிய விடிய கோஷங்களை எழுப்பியதோடு, “முதலமைச்சர் இருக்குற ஏரியாவுக்கே இந்த கதிதானா, அப்போ சாமானிய மக்களோட நிலைமை என்ன?” அப்படின்னு ஆவேசமாக் கேள்வி எழுப்பி இசிஆர் சாலையில் மறியலலில் ஈடுபட முயற்சித்தனர்.
சம்பவம் அறிந்து உடனடியாக அப்பகுதிக்கு வந்த நீலாங்கரை போலீசாரும் மின்வாரிய அதிகாரிகளும் பொதுமக்களோட சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி, “புது டிரான்ஸ்பார்மர்ல ஏற்பட்ட பழுது மற்றும் ஓவர் லோடு பிராப்ளம் காரணமாதான் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது, உடனே சரி பண்ணிடுறோம்”னு உறுதி கொடுத பிறகு நள்ளிரவு 2 மணி அளவில் மக்கள் அங்கிருந்து கலந்தனர்.