இலவசமாகக் கிடைத்தால் நஞ்சைக் கூட முண்டியடித்துக்கொண்டு உண்ணத் துணியும் அவலநிலை நம் நாட்டில் நிலவுகிறது என்பதற்குச் சான்றாக உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ஒரு அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது.
கான்பூரின் பங்க் தொழில்துறை பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில், வர்த்தகர் அல்லது நிறுவனம் ஒன்று காலாவதியான பெருமளவிலான சாக்கலேட்டுகள் மற்றும் டாஃபிக்களைக் கொண்டுவந்து கொட்டியுள்ளது. இதுகுறித்த செய்தி அப்பகுதி மக்களுக்கும் சிறுவர்களுக்கும் தெரியவந்ததும், காலாவதியான அந்தச் சாக்கலேட்டுகளை போட்டிபோட்டுக்கொண்டு அள்ளிச் செல்ல பெரும் கூட்டமே அங்கு திரண்டது.
எவ்வித சுகாதார அச்சமுமின்றி, மக்கள் பைகளிலும் மூட்டைகளிலும் அந்த ஆபத்தான சாக்கலேட்டுகளை அடைத்துக்கொண்டு தங்களது வீடுகளுக்கு ஆர்வத்துடன் எடுத்துச் சென்ற காட்சி அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.