அண்டை மாநிலங்களான கேரளா, புதுச்சேரி மற்றும் வடகிழக்கு மாநிலமான அசாம் ஆகியவற்றில் நேற்று நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்தலை விட அதிக அளவிலான வாக்குப்பதிவு பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜனநாயகத் திருவிழாவில் மக்கள் காட்டிய ஆர்வம் வாக்கு சதவீதத்தில் எதிரொலித்துள்ள நிலையில், புதுச்சேரி மாநிலம் 89.20 சதவீத வாக்குப்பதிவுடன் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இது கடந்த முறையை விட (82.2%) கணிசமான உயர்வாகும்.
இதேபோல், அசாம் மாநிலத்தில் 85.10 சதவீத வாக்குகளும், கேரளாவில் 77.50 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. வாக்காளர்களின் இந்த எழுச்சியான பங்கேற்பு, தேர்தல் களத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், புதுச்சேரியின் அதீத வாக்குப்பதிவு அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.