இந்தியாவில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக செயல்படும் தானியங்கி கதவு தீர்வுகளின் ஆஸ்திரேலிய உற்பத்தியாளரான ஆட்டோ இன்கிரெஸ், இன்று சென்னை ஒரகடத்தில் ஒரு புதிய உற்பத்தி வசதியைத் திறந்து வைத்தது. ₹100 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் கட்டப்பட்ட இந்த வசதி, முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மெக்ராத் மற்றும் சென்னையில் ஆஸ்திரேலியாவின் துணைத்தூதர் சிலாய் ஜாகி ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக கலந்து கொண்ட நிலையில் திறந்து வைக்கப்பட்டது.
3 ஏக்கர் பரப்பளவில், சுமார் 60,000 சதுரஅடி கட்டப்பட்ட பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலை, ஆட்டோ இன்கிரெஸ் இந்தியா முழுமையான உள்நாட்டு உற்பத்தியை நோக்கி முன்னேறுவதைக் குறிக்கிறது. துல்லியமான பொறியியல் மற்றும் தரச்சோதனை திறன்களுடன் பொருத்தப்பட்டுள்ள இது, தானியங்கி நழுவுக்கதவு அமைப்புகள், சுழல்கதவு இயக்கிகள் மற்றும் கனரக தானியங்கி கதவுகளை உற்பத்தி செய்யும். அத்துடன் அவற்றை இயக்கும் மோட்டார்கள், இயக்க வழிமுறைகள், மின்னணு கட்டுப்பாட்டாளர்கள், செயல்படுத்தும் உணரிகள், பாதுகாப்பு கூறுகள் மற்றும் துணைக் கருவிகளையும் உற்பத்தி செய்யும்.
திறப்பு விழா குறித்து பேசிய ஆட்டோ இன்கிரெஸ் இந்தியாவின் இயக்குநர் சதீஷ் விஜயன், “புதுமை மற்றும் தரம் சார்ந்த உற்பத்தி மூலம் தானியங்கி கதவுத்துறையில் நாட்டின் திறன்களை வலுப்படுத்துவதில் ஆட்டோ இன்கிரெஸ் இந்தியா உறுதியாக உள்ளது. இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சியில் எங்கள் சென்னை வசதி ஒரு முக்கியமான முதலீட்டைக் குறிக்கிறது. இங்கே, உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்காக உலகத்தரமான தானியங்கி கதவு தீர்வுகள் மற்றும் கூறுகளை நாங்கள் உற்பத்தி செய்வோம்; அதே நேரத்தில் ‘மேக் இன் இந்தியா’ முயற்சிக்கு பங்களிப்போம்” என்றார்.
இந்த முதலீடு, இந்திய அரசாங்கத்தின் ‘மேக் இன் இந்தியா’ முயற்சியுடன் இணைந்துள்ளது. குழுமத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்காக இந்தியாவை ஒரு உற்பத்தி தளமாக நிறுவுகிறது. தயாரிப்பு புதுமை மற்றும் பொறியியலுக்காக இந்தியாவை மையமாகக் கொண்ட ஒரு உலகளாவிய ஆர்&டி குழுவை அமைக்கவும், சர்வதேச திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு விவரக் குறிப்பு குழுவை அமைக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் நிறுவனத்தின் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர் சேவை மற்றும் தொழில்நுட்ப ஆதரவு அமைப்பை இந்த குழுக்கள் மேலும் வளர்த்தெடுக்கும். அந்த அமைப்பு ஏற்கனவே நிறுவனத்தின் ஆஸ்திரேலிய செயல்பாடுகளுக்கு சேவை அளித்து வருகிறது. இந்திய சந்தையில் நிறுவனம் தனது பாதையை உருவாக்க உதவிய குயின்ஸ்லாந்து அரசாங்கத்தின் அர்ப்பணிப்புள்ள உலகளாவிய வணிக அமைப்பான டிரேட் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் குயின்ஸ்லாந்து (TIQ), ஆட்டோ இன்கிரெஸுக்கு இந்த பயணத்தில் ஆதரவளித்து வருகிறது.
டிரேட் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் குயின்ஸ்லாந்தின் (TIQ) தென் ஆசியா மூத்த வர்த்தக மற்றும் முதலீட்டு ஆணையர் அபினவ் பாட்டியா, “குயின்ஸ்லாந்து நிறுவனங்கள் தங்கள் தொழில்நுட்பத்தையும் நிபுணத்துவத்தையும் இந்தியாவில் நீண்டகால வணிக வெற்றியாக மாற்றுவதற்கு ஆட்டோ இன்கிரெஸ் ஒரு சிறந் எடுத்துக்காட்டு. ஒரு தசாப்தத்திற்கு முன்பு தனது இருப்பை நிறுவியதிலிருந்து, இன்று தனது திறன்களையும் இலக்குகளையும் விரிவுபடுத்தும் வரை, நிறுவனத்தின் பயணம் இந்திய சந்தையில் உள்ள வாய்ப்புகளையும் ஆஸ்திரேலியா–இந்தியா வணிக உறவின் வலிமையையும் பிரதிபலிக்கிறது. டிரேட் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் குயின்ஸ்லாந்தில், இந்த பயணத்திற்கு நாங்கள் ஆதரவளித்ததில் பெருமை அடைகிறோம்” என்றார்.
சென்னையில் ஆஸ்திரேலியாவின் துணைத்தூதர்சிலாய் ஜாகி, “ஆட்டோ இன்கிரெஸின் வசதி திறப்பு, ஆஸ்திரேலியா–இந்தியா வணிக உறவில் ஊக்குவிக்கும் ஒரு வளர்ச்சியாகும். இந்தியாவின் உற்பத்தி திறன்களிலும் தமிழ்நாட்டின் தொழில்துறை சூழலிலும் ஆஸ்திரேலிய நிறுவனங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இது நிரூபிக்கிறது. தொழில்நுட்பம், புதுமை மற்றும் உள்ளூர் நிபுணத்துவத்தை ஒன்றிணைக்கும் முதலீடுகள், எங்கள் இரு நாடுகளுக்கு இடையே வலுவான வணிக இணைப்புகளை உருவாக்கி, மேலும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன” என்றார்.
கடந்த 10 ஆண்டுகளாக, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், வணிகக் கட்டிடங்கள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள், சில்லறை இடங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக ஆட்டோ இன்கிரெஸ் தானியங்கி கதவு தீர்வுகளை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது 100 க்கும் மேற்பட்ட பணியாளர்களை நிறுவனம் கொண்டுள்ளது. புதிய வசதியில் செயல்பாடுகள் விரிவடையும் போது, பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், உற்பத்தி நிபுணர்கள் மற்றும் பிற திறமையான நிபுணர்களை சேர்க்கவும் எதிர்பார்க்கிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் தேவை அதிகரிக்கும் போது, புதிய உற்பத்தி அலகு தயாரிப்பு வரம்பை விரிவுபடுத்துவதையும் இறக்குமதியை நம்புவதைக் குறைப்பதையும் வலுவாகக்கு றிக்கிறது. இது இருநாடுகளுக்கும் பரஸ்பர நன்மை அளிக்கும்.