இந்தியாவில் பருவமழை காரணமாக அங்கங்கே மழை பெய்து வருகிறது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
டெல்லியில் பருவமழைகாரணமாக இன்று காலை அங்காங்கே மலை பெய்தது. இந்நிலையில் அங்கு நிலவி வரும் கடும் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் டெல்லியின் என்சிஆர் பகுதிக்கு மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேகமூட்டமான வானமும், மிதமான மழை பொலிவு அல்லது பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் தென்மேற்குப் பருவமழை தீவிரமாக இருந்ததால், மும்பையும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளும் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் மழை பொழிகிறது. இதனால் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் பல பகுதிகளிலும் மிதமானது முதல் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மும்பை, தானே மற்றும் ராய்கட் பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. குறிப்பாக பால்கர் பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த பகுதிகளில் வாழும் மக்கள் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுளள்து.
அடுத்த 24 மணி நேரத்தில் மும்பை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கன முதல் மிகக் கனமான மழை பெய்யும் என்றும், ஆங்காங்கே பலத்த காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.