சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பகல் நேரங்களில் மழை பெய்யும், என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
இலங்கை அருகே நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தெற்கு தமிழகத்தின் பல இடங்களில் பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளது; குறிப்பாக டெல்டா முதல் திருநெல்வேலி வரையிலான கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.
இந்தச் சுழற்சியின் அடுத்தகட்ட நகர்வு குறித்து பல்வேறு மாறுபட்ட கணிப்புகள் நிலவினாலும், வரும் நாட்களில் தமிழகத்தில் நல்ல மழை பெய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த இரண்டு நாட்களுக்குக் காலை வேளைகளில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்யக்கூடும். அடுத்த வார தொடக்கத்தில் மழையின் அளவு அதிகரிப்பது, இந்தச் சுழற்சியின் நகர்வைப் பொறுத்தே அமையும்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.