X

அரசுத் துறை அதிகாரிகளுடனான முதலமைச்சரின் ஆய்வுக் கூட்டங்கள் குறித்த கால அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் ஜூலை 2-ஆம் தேதி முதல் ஜூலை 22-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகளுடனான முதலமைச்சரின் ஆய்வுக் கூட்டங்கள் குறித்த அதிகாரப்பூர்வ கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக் கூட்டம் இன்று (ஜூலை 2) கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மற்றும் வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து வரும் நாட்களில் ஊரக வளர்ச்சி, நெடுஞ்சாலைகள், உயர் கல்வி, பள்ளி கல்வி, சமூக நலன், தொழிலாளர் நலன், ஆதிதிராவிடர் நலன், பிற்படுத்தப்பட்டோர் நலன், தொழில் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSME), வணிகவரி, பொதுப்பணி மற்றும் நீர் வள ஆதாரத் துறைகளின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வுகள் நடத்தப்படவுள்ளன.

மேலும், கால்நடை பராமரிப்பு, மீன்வளம், சுகாதாரம், இளைஞர் நலன், விவசாயம், சுற்றுச்சூழல், வீட்டுவசதி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, சுற்றுலா, அறநிலையத்துறை, மனிதவள மேலாண்மை, இயற்கை வளங்கள் ஆகிய துறைகளைத் தொடர்ந்து, இறுதி நாளான ஜூலை 22 அன்று திட்டமிடல் மற்றும் உள், மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறைகளுடனான ஆலோசனையுடன் இந்த மாபெரும் துறைவாரியான ஆய்வுக் கூட்டங்கள் நிறைவடையவுள்ளன.