X

ரஷியாவின் கச்சா எண்ணெய் பயன்பாட்டை நிறுத்துவதாக ரிலையன்ஸ் அறிவிப்பு

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பிறநாடுகள் மீதான வரி விதிப்பு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.

இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு, ரஷியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாடாக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படும் என டிரம்ப் மிரட்டல் விடுத்தார். மேலும் ரஷியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை மேற்கொள்ளும். இதில் பாரபட்சம் இல்லை. அது எந்த நாடாக இருந்தாலும் சரி என்று டிரம்ப் கடுமையாக எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த நிலையில், ரஷியாவின் கச்சா எண்ணெய் பயன்பாட்டை நிறுவத்துவதாக பிரபல தொழில் நிறுவனமான ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள அதன் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையத்தில் ரஷிய கச்சா எண்ணெயை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த முடிவு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ன் தொடர் அழுத்தம் காரணமாகவே எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று தொழில்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.