இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்தது. இதையடுத்து 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 18.4 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை நியூசிலாந்து வெற்றி கொண்டது.
இப்போட்டியில் அனைத்து இந்திய பேட்ஸ்மேன்களும் சொதப்பிய நிலையில் அதிரடியாக விளையாடிய சிவம் துபே 15 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சிவம் துபே 3வது இடத்திற்கு முன்னேறினார்.