X

6 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் ‘சிலந்தி -2’ !

தமிழில் முழுமையான முதல் டிஜிட்டல் திரைப்படமாக வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ’சிலந்தி’. ஆதிராஜன் எழுதி இயக்கிய இப்படத்தை ஜி கம்பெனி (G COMPANY) சார்பில் சங்கர் பழனிச்சாமி தயாரித்தார். தற்போது இக்குழுவினர் ’சிலந்தி 2’-க்காக மீண்டும் கைகோர்க்கிறார்கள்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமான திரைப்படமாக உருவாகும் ‘சிலந்தி 2’ தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி என 6 மொழிகளில் பேன் இந்தியா திரில்லர் ஜானர் திரைப்படமாகவும் உருவாக உள்ளது.

தமிழ் தெலுங்கு மலையாளம் சினிமாவில் கலக்கிவரும் மாளவிகா மேனன் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நாயகியாக நடிக்கிறார். பல மொழிகளிலும் வலம் வரும் முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

பிரபல தொழில் நுட்ப கலைஞர்களுடன் இப்படத்தின் படப்பிடிப்பு கம்போடியா, வியட்நாம் நாடுகளிலும் நடைபெற உள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் நடித்த ’லோகா’, மற்றும் ’காந்தாரா’ பட ஸ்டைலில் உருவாகும் இந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் மட்டுமே 30 நிமிடங்களுக்கு மேல் இடம் பெறுகிறது.

பெரிய பட்ஜெட்டில் புதிய தொழில்நுட்பத்தில் உருவாகும் ’சிலந்தி – 2’ ஆதிராஜன் எழுதி இயக்கும் ஐந்தாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.