X

தமிழ்நாட்டின் 13 வது முதலமைச்சராக பதவி ஏற்றார் நடிகர் ஜோசப் விஜய்!

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக நடிகர் விஜயின் தவெக உருவெடுத்தது. இருப்பினும், அவர் முதலமைச்சராக பதவி ஏற்பதில் கடந்த சில தினங்களாக பெரும் சிக்கல் நீடித்து வந்த நிலையில், நேற்று மாலை அனைத்து சிக்கல்களும் தீர்ந்து அவர் முதலமைச்சராக பதவி ஏற்பதற்கான வழி திறக்கப்பட்டது. இதையடுத்து விஜய் முதலமைச்சராக மே 10 அம தேதி, காலை 10 மணிக்கு பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் நடைபெற்றது. இன்று காலை 10 மணிக்கு திட்டமிட்டபடி தவெக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவி ஏற்றுக்கொண்டார். சி.ஜோசப் விஜய் எனும் நான் என்று சொல்லி முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.

இதன் மூலம் சி.ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் 13 வது முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.