ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட ஸ்டார்ஷிப் 15 விண்கலம், விண்ணில் ஏவப்பட்ட 26 ஸ்டார்லிங்க் வி3 செயற்கைக்கோள்களையும் வெற்றிகரமாகப் புவியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தி சாதனை படைத்துள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்ட இந்த விண்கலம், திட்டமிட்டபடி சுற்றுப்பாதையை அடைந்து தனது முதல் செயல்பாட்டுப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
ஒலியை விட 23 மடங்கு வேகத்தில், அதாவது மணிக்குச் சுமார் 28,000 கிலோமீட்டர் வேகத்தில் பூமியை 14 முறை சுற்றி வரத் தொடங்கியுள்ள இந்த விண்கலம், சுமார் 22 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு நாளை (நவம்பர் 15) அதிகாலை 2:49 மணிக்கு மீண்டும் ஏவுதளத்திற்குத் திரும்பி இயந்திரக் கைகளால் பிடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
விண்கலத்தின் மேல் பகுதியை ஏவுதளத்திலேயே மீண்டும் பிடிக்கும் இந்தச் சோதனை வெற்றி பெற்றால், விண்வெளிப் பயண வரலாற்றில் அது ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமையும்.