X

தமிழ்நாட்டில் சில்லறை விற்பனை செயல்பாடுகளை விரிவுப்படுத்தும் தனிஷ்க்! – மேற்கு தாம்பரத்தில் புதிய தனிஷ்க் கிளை திறப்பு

டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய ஜுவல்லரி ரீடெய்ல் பிராண்டான தனிஷ்க் (Tanishq), சென்னை மேற்கு தாம்பரத்தில் தனது புதிய விற்பனை நிலையத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் தனது விற்பனை செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் தனிஷ்க் நிறுவனத்தின் 66-வது விற்பனை நிலையம் மற்றும் சென்னை மாநகரத்தில் 24-வது விற்பனை நிலையம் என்ற ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இப்புதிய விற்பனை நிலையத்தை டைட்டன் நிறுவனத்தின் ஜுவல்லரி பிரிவின் தலைமை செயல் அதிகாரி திரு. அருண் நாராயண் (Mr. Arun Narayan, CEO, Jewellery Division, Titan Company Ltd)மற்றும் தமிழ்நாடு & கேரளா ஜுவல்லரி பிரிவின் பிசினஸ் ஹெட் திரு. நரசிம்மன் ஒய்.எல் (Mr. Narasimhan Y L, Circle Business Head, Jewellery, TN & Kerala) ஆகியோர், தனிஷ்க் நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் முன்னிலையில் மதியம் 12:30 மணிக்குத் திறந்து வைத்தனர்.

மேற்கு தாம்பரத்தில் புதிதாக அறிமுகமாகும் இந்த புதிய விற்பனை நிலையத்தின் தொடக்கத்தைக் கொண்டாடும் வகையில், தனிஷ்க் ஒரு பிரத்தியேக அறிமுகச் சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி, வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் நகைகளுக்கு தங்க நாணயத்தைப்* (complimentary gold coin*)அறிமுக சலுகையாகப் பெறலாம். இந்தச் சலுகை மே 1 முதல் மே 3, 2026 வரை மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு தாம்பரத்தில், எண் 257, ஜி.எஸ்.டி சாலை, மேற்கு தாம்பரம், சென்னை – 600045 [257, GST Road, West Tambaram, Chennai, Tamil Nadu 600045] என்ற முகவரியில் அமைந்துள்ள இப்புதிய விற்பனை நிலையம், 8000 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது. தனிஷ்க்கின் நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் ‘வாடிக்கையாளர்களுக்கே முன்னுரிமை’ என்ற தனிஷ்க்கின் தத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில், நவீனமயமாகவும், விசாலமான இடவசதியுடனும் ஷாப்பிங் அனுபவத்தை மேம்படுத்தும் விதமாக இந்த விற்பனை நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இங்கு தங்கத்தினால் வடிவமைக்கப்பட்ட நகைகள், மிக நேர்த்தியான வைர நகைத்தொகுப்புகள், சாலிட்டர்கள் (Solitaires), போல்கி (Polki) நகை வகைகள் மற்றும் தினசரி பயன்பாட்டிற்காகவே வடிவமைப்பட்டுள்ள ஏராளமான நகைகள் என தனிஷ்க்கின் புகழ்பெற்ற வடிவமைப்புகளிலான நகைகள் இங்கு விற்பனைக்கு உள்ளன. மேலும், பழமையான நகைகளின் அழகியலுடன் கூடிய ஆன்ட்டிக் நகைகள் [Anique jeweller] மற்றும் தென்னிந்திய கிளாஸ் குந்தன் வடிவமைப்புகளிலான (South Indian Glass Kundan designs) நகை வகைகளையும் வாடிக்கையாளர்கள் இங்கே வாங்கலாம். இயற்கை ரத்தினக் கற்களின் சமீபத்திய நகைத்தொகுப்பான ‘ஹியூஸ்’ (Hues) மற்றும் பாரம்பரியமிக்க நகைகள் முதல் நவீன வடிவமைப்பிலான நகைகள் என பல்வேறு ரகங்களும் இங்கு இடம்பெற்றுள்ளன.

மேலும், இந்த விற்பனை நிலையத்தில் தனிஷ்க் டைமண்ட் எக்ஸ்பர்டைஸ் சென்டர் (Tanishq Diamond Expertise Centre)-ம் இடம்பெற்று உள்ளது. இது வைரங்களின் உண்மைத்தன்மை, அதன் அசல் வகை மற்றும் ஜொலிக்கும் தரம் ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் சரிபார்க்க உதவும் ஒரு தொழில்நுட்ப முயற்சியாகும். தொழில்நுட்பத்தினால் மிகவும் மேம்பட்ட ஐந்து கருவிகளைக் கொண்டிருக்கும் தனிஷ்க் டைமண்ட் எக்ஸ்பர்டைஸ் சென்டர் மூலம் வைரத்தின் உயர்தரம், ஒளிரும்திறன் மற்றும் லேசர் மார்க்கிங் போன்ற முக்கிய அம்சங்களை மதிப்பீடு செய்யலாம்.

புதிய விற்பனை நிலையத் திறப்பு விழா குறித்து டைட்டன் நிறுவனத்தின் ஜுவல்லரி பிரிவு தலைமை செயல் அதிகாரி திரு. அருண் நாராயண் [Mr. Arun Narayan, CEO, Jewellery Division, Titan Company Ltd] கூறுகையில், “மிகவும் நுணுக்கமான கைவினைத்திறன், நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் உயர்தரம் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் தமிழ்நாடு எங்களுக்கு எப்போதும் ஒரு முக்கியமான சந்தையாக இருந்து வருகிறது. மேற்கு தாம்பரத்தில் எங்களது புதிய விற்பனை நிலையத்தைத் தொடங்குவது, இப்பகுதியில் எங்களது சேவையை பெரும் எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு சென்றடையும் வகையில் விரிவுப்படுத்துவதோடு, வாடிக்கையாளர்களுக்கு ஒரு உயர்தரமான ஷாப்பிங் அனுபவத்தை வழங்க வேண்டுமென்ற எங்களது அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. எங்களது பல்வேறு வகைகளிலான வடிவமைப்புகள் மூலம் வாடிக்கையாளர்களின் விருப்பங்களையும், எதிர்பார்புகளை நிறைவேற்றி, அவர்களின் வாழ்வின் முக்கியக் கொண்டாட்டங்களில் ஒரு அங்கமாக இருக்க நாங்கள் விரும்புகிறோம்.” என்றார்.

தனிஷ்க் நிறுவனத்தின் சர்க்கிள் பிசினஸ் மேனேஜர் திரு. தினேஷ் குமார் (Mr. Dinesh Kumar, Circle Business Manager, Tanishq) பேசுகையில்: “சென்னையின் மேற்கு தாம்பரத்தில் புதிய விற்பனை நிலையத்தைத் தொடங்குவதன் மூலம் தமிழகத்தில் எங்களது விற்பனை செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்துவதில் நாங்கள் பெரும்மகிழ்ச்சி அடைகிறோம். எங்களது தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு மிக எளிதாகக் கிடைக்கச் செய்வதற்கான தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த மைல்கல் விரிவாக்கம் அமைந்துள்ளது. வாடிக்கையாளர்களின் மாறிவரும் ரசனைக்கேற்ப பல்வேறு வகைகளிலான, மிக நுணுக்கமான, கைவினைத்திறன்மிக்க வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் இந்த விற்பனை நிலையம் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்களது வாடிக்கையாளர்களை வரவேற்பதுடன், அவர்களின் முக்கியமான தருணங்களில் நாங்களும் பங்கெடுப்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.